ஜாகுவார் ஈ-டைப் கார் சிறந்த பிரிட்டிஷ் காராக தேர்வு

By Ravichandran

ஜாகுவார் ஈ-டைப் கார் சிறந்த பிரிட்டிஷ் காராக தேர்வாகியுள்ளது.

உலக அளவில் சிறந்த பிரிட்டிஷ் காருக்கான வாக்குபதிவு சர்வதேச அளவில் நடத்தப்பட்டது. இந்த வாக்குபதிவு, கிளாசிக் அண்ட் ஸ்போர்ட்ஸ் கார் ஷோ என்ற பெயரில் இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள அலெக்ஸாண்ட்ரா பேலஸில், 2015 அக்டோபர் 31 முதல் நவம்பர் 1 வரை, காட்சிபடுத்தப்பட்ட கார்களுக்கு இடையே நடத்தப்பட்டது.

இதில் ஆஸ்டின் செவன், பென்ட்லீ ஸ்பீட் சிக்ஸ், ஃபோர்ட் ஜிடி40, ஜாகுவார் ஈ-டைப், ஜாகுவார் எக்ஸ்கேஎஸ்எஸ், லோட்டஸ் செவன், மெக்லாரன் எஃப்1, மினி கூப்பர் எஸ், ரேஞ்ஜ் ரோவர், ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் கோஸ்ட் உள்ளிட்ட 10 கார்கள் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன. இதில், ஜாகுவார் ஈ-டைப் கார் தான் அதிக அளவிலான வாக்குகளை குவித்தது.

Jaguar E-type has been Voted As The Best British Car Ever

ஜாகுவார் நிறுவனத்தால் வடிவமைக்கபட்ட மிக சிறந்த காராக ஜாகுவார் ஈ-டைப் இன்று வரையிலும் கருதப்படுகிறது. இது இன்றும் கார் ரசிகர்களை மயக்கி வருகிறது என்றால் அது மிகையாகாது. மேலும், அது காலத்தின் போட்டியை கடந்து இன்றும் புகழுடன் ஓங்கியுள்ளது. இது அறிமுகபடுத்தபட்ட போது, இது வரை உருவாக்கப்பட்ட கார்களிலேயே இது தான் சிறந்த கார் இது தான், என்ஸோ ஃபெராரி தெரிவித்தது.

1961-ஆம் ஆண்டில் நடந்த, 1961 ஜெனிவா மோட்டர் ஷோவில் முதன்முதலாக காட்சிபடுத்தபட்ட உடன், ஜாகுவார் ஈ-டைப் கார் உடனடி ஹிட்டானது. இதே மோட்டர் ஷோவில், ஒபன் - டாப் (திறந்த கூரை) அமைப்பு கொண்ட 77 ஆர்டபுள்யூ ஸ்போர்ட்ஸ் காரும் காட்சிபடுத்தபட்டது.

சர் ஜாக்கி ஸ்டீவார்ட், ஸ்டீவ் மெக். க்வீன், ஜார்ஜ் பெஸ்ட், ஃப்ரான்க் சினாட்ரா மற்றும் பிரிக்கெட் பார்டாட் உள்ளிட்ட பல்வேறு வி.ஐ.பிக்கள் இந்த ஜாகுவார் ஈ-டைப் காரை வைத்துகொண்டிருந்தனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து;

இளைய தலைமுறையினர் மற்றும் முதியவர்கள் என அனைவரின் மனங்களையும் கொள்ளை கொள்ளும் ஜாகுவார் ஈ-டைப் தகுதியான வெற்றியாளர் தான் !

ஜாகுவார் ஈ-டைப் கண்ணோட்டம் : (உற்பத்தி ; 1961 - 75 )

1961 இஞ்ஜின் ; 3.8 லிட்டர், 6 சிலிண்டர், கார்புரேடட்
265 பிஹெச்பி, 325 என்எம் டார்க், உச்சபட்ச வேகம் - மணிக்கு 240 கிலோமீட்டர்
மணிக்கு 0 - 100 கிலோமீட்டர் --- 7 நொடிகள்

1964 இஞ்ஜின் ; 4.2 லிட்டர், 6 சிலிண்டர், கார்புரேடட்
265 பிஹெச்பி, 384 என்எம் டார்க், உச்சபட்ச வேகம் - மணிக்கு 240 கிலோமீட்டர்
மணிக்கு 0 - 100 கிலோமீட்டர் --- 7 நொடிகள்
1/4 மைல் டிராக் ரேஸ் நேரம் --- 15 நொடிகள்

1971 இஞ்ஜின் * ; 5.3 லிட்டர், வி-12, கார்புரேடட்
272 பிஹெச்பி,
மணிக்கு 0 - 100 கிலோமீட்டர் --- 7 நொடிகள்

* இந்த இஞ்ஜின் ல மேன்ஸ் ரேசிங் போட்டிகாக தயாரிக்கபட்டது.

More from DriveSpark

Article Published On: Monday, November 2, 2015, 14:02 [IST]
English summary
Jaguar E-type is Voted As The Best British Car Ever ! The Jaguar E-type has been voted as the Best British Car Ever in a global public vote. The poll results were revealed at the inaugural Classic & Sportscar — The London Show, running from 30 October to 1 November at Alexandra Palace, London, England.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+