இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதிய ஸ்மார்ட்போன் ஆப் வெளியிட்ட ஜேஎல்ஆர்!!

Written By:

தனது கார் வாடிக்கையாளர்களுக்காக இன்-கன்ட்ரோல் என்ற புதிய ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை ஜாகுவார் - லேண்ட்ரோவர் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளனர்.

ஜேஎல்ஆர் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் என அழைக்கபடும் மாபெரும் கார் உற்பத்தி நிறுவனம், இன்கண்ட்ரோல் ஆப் ஸ்மார்ட்ஃபோன் இண்டெக்ரேஷன் பிளாட்ஃபார்ம் எனப்படும் ஸ்மார்ட்ஃபோன் ஒருங்கிணைப்பு பிளாட்ஃபார்மை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய பிளாட்ஃபார்ம் மூலம், கார் உரிமையாளர்கள் தங்களின் ஸ்மார்ட்ஃபோனுடன் காரின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை ஒருங்கிணைத்து கொள்ள முடியும். இது பாஷ் நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கபட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மூன்றாம் தரப்பு அப்ளிகேஷன் டெவலப்பர்களுடன் பணியாற்றி, இன்கண்ட்ரோல் பிளாட்ஃபார்மில், தங்களது அப்ளிகேஷன் ஒருங்கிணைக்கபட்டுள்ளதாக ஜேஎல்ஆர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த இன்கன்ட்ரோல் பிளாட்ஃபார்ம் அண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் உள்ளிட்ட இரண்டில் நன்றாக இயங்குகிறது. இந்த இன்கன்ட்ரோல் பிளாட்ஃபார்மில், ஆரம்பகட்டத்தில் என்டிடிவி, ஹங்காமா, மேப்மைஇந்தியா மற்றும் ஜோமாடோ உள்ளிட்ட ஆப்-கள் இயங்குகிறது.

jaguar-land-rover-jlr-incontrol-apps-launched-in-india

பொலிவு கூட்டபட்டு, சமீபத்தில் வெளியான இவோக் காரை தவிர மற்ற அனைத்து மாடல்களிலும், இந்த புதிய இன்கண்ட்ரோல் பிளாட்ஃபார்ம் கிடைக்கின்றது.

ஏப்ரல் 2016-திற்கு பின் வெளியாக உள்ள அனைத்து இவோக் மாடல்கலும், இந்த புதிய இன்கண்ட்ரோல் அப்ளிகேஷனுடன் மேம்படுத்தபட்டு வழங்கபடும் என ஜேஎல்ஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Jaguar Land Rover (JLR) launched the new InControl Apps smartphone integration platform. This newly launched platform in India aids the Car owners to integrate their smartphones with their car's infotainment system. This new Platform is developed with the help of Bosch. InControl platform is very much compatible with both the Android and iOS.
Story first published: Friday, December 18, 2015, 10:59 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more