ஜேசிபி இந்தியா ஒரு லட்சம் எகோமேக்ஸ் இஞ்ஜின்கள் தயாரித்து சாதனை

By Ravichandran

ஒரு லட்சமாவது ஜேசிபி எகோமேக்ஸ் எஞ்சின் உற்பத்தி செய்து, புதிய மைல்கல்லை தொட்டிருக்கிறது ஜேசிபி இந்தியா நிறுவனம்.

ஜேசிபி நிறுவனம் 2011-ஆம் ஆண்டு முதல் தங்களின் தேவைகளுக்கான இஞ்ஜின்களை தாங்களே தயாரித்து கொண்டிருக்கின்றனர். இன்றைய தேதியில், ஜேசிபி மிகவும் எரிபொருள் திறன்மிக்க, நம்பகமான மற்றும் அதிக திறன் கொண்ட இஞ்ஜின்களை தயாரித்து இந்திய சந்தைக்கு வழங்கி வருகின்றனர்.

JCB India Sets Production Landmark by rolling out 100000th JCB ecoMAX engine

ஜேசிபி நிறுவனம் தற்போது 3 வகையான இஞ்ஜின்களை தயாரித்து வருகின்றது. டர்போசார்ஜர் இல்லாத இஞ்ஜின், டர்போசார்ஜர் கொண்ட இஞ்ஜின் மற்றும் எலக்ட்ரானிக் இஞ்ஜின் என்ற மூன்று மாடல்களில் இஞ்ஜின்களை தயாரித்து வழங்கி வருகிறது. 4 சிலிண்டர்கள் கொண்ட இந்த இஞ்ஜின்கள், 75 பிஹெச்பி முதல் 162 பிஹெச்பி வரையிலான திறனை வெளிபடுத்த கூடியதாக உள்ளது.

இந்த சாதனை குறித்து, ஜேசிபி இந்தியாவின் தலைமை அதிகாரி விபின் சோந்தி பெருமிதம் வெளிபடுத்தினார். ஒரு லட்சமாவது ஜேசிபி எகோமேக்ஸ் இஞ்ஜின் தயாரிப்பினை அடைந்தது மாபெரும் சாதனை என கூறினார்.

JCB India Sets Production Landmark by rolling out 100000th JCB ecoMAX engine

பல்லப்கர் என்ற இடத்தில் உள்ள ஆலையை சேர்ந்த ஆண், பெண் பணியாளர்கள் இணைந்து, இந்த மாபெரும் சாதனையை புரிய உதவியுள்ளனர் என தெரிவித்தார்.

இந்த சாதனை, ஜேசிபி இந்தியா தயாரித்து வழங்கி வரும் உலக தர பொருட்களுக்கு கிடைத்த சான்று போல் அமைந்துள்ளது. இங்கு தயாரித்து வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும், "ஒன் குளோபல் குவாலிட்டி" எனும், உலகம் முழுவதும் ஒரே தரம் என்ற எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு கொள்கையின் அடிப்படையில், மிக உயரிய தரத்திலான பொருட்களை தயாரித்து வழங்குகிறோம்," என சோந்தி கூறினார்.

இதனால், இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள், உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அனைவருக்கும் ஒரே மாதிரியான மன நிறைவு வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் என விபின் சோந்தி தெரிவித்தார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 27, 2015, 9:47 [IST]
English summary
JCB India Sets Production Landmark by rolling out 100000th JCB ecoMAX engine. The JCB ecoMAX engines are regarded as one of the most fuel efficient, reliable, and productive engines available in the Indian market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+