வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க 4 அடி தண்ணீரில் ஜீப்பில் சென்ற ஜீப் அலி!!

Written By:

சென்னையில் ஏற்பட்ட பெரும் மழை வெள்ளம் இனம், மதம், மொழி என எல்லாவற்றையும் அடித்துச் சென்றுவிட்டது. மதங்களை கடந்த மனித நேயத்தை பல இடங்களிலும், சம்பவங்களும் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இவற்றிற்கெல்லாம் ஒருபடி மேலே போய், வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற 4 அடி தண்ணீர் சூழ்ந்த பகுதியில் ஜீப்பை செலுத்தி சென்ற ஜீப் அலி மற்றும் அவரது நண்பரின் துணிச்சலும், அவர்களது மனிதாபிமானமும் சிலிர்க்க வைக்கிறது.

ராயப்பேட்டை அலி

ராயப்பேட்டை அலி

சென்னை, ராயப்பேட்டையை சேர்ந்த முகம்மது அலி, சென்னையில் பிரபல ஜீப் மெக்கானிக். ஆஃப்ரோடு வாகனங்களை உருவாக்குவதிலும் கைதேர்ந்தவர். மேலும், ஆஃப்ரோடு பிரியர்கள் மத்தியில் இவர் பிரபலமானவர். ஜீப் அலி என்று ஆஃப்ரோடு பிரியர்கள் மத்தியில் பிரபலமானவர்.

தில் பயணம்

தில் பயணம்

4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கிய பகுதியில் வீடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக தனது ஜீப்பில் சென்ற பயணம் இப்போது இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். ஆம், தனது நண்பருடன் சாலை எது, பள்ளம் எது என்று தெரியாத பகுதியில் அசால்ட்டாக ஜீப்பில் சென்று மீட்க செல்கிறார். அவர் படகில் செல்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.

தில்லான அலி

தில்லான அலி

ஆஃப்ரோடு ஓட்டுபவர்களுக்கு அதிக தில்லும், சமயோஜிதமும் இருக்க வேண்டும். அந்த அனுபவத்தில் அவர் எதை பற்றியும் கவலைப்படாமல் ஜீப்பை ஓட்டிச் செல்கிறார். ஜீப்பிற்குள் தண்ணீர் புகுந்தாலும், அசராமல் ஜீப்பை செலுத்துகிறார்.

மஹிந்திரா ஜீப்

மஹிந்திரா ஜீப்

ஆஃப்ரோடு சாகசங்களுக்கு பயன்படுத்தப்படும் பழைய மஹிந்திரா ஜீப்பில் அவர் அசால்ட்டாக ஓட்டிச் செல்கிறார். இங்கே அலியுடன் இந்த மஹிந்திரா ஜீப்பின் சாமர்த்தியத்தையும் குறிப்பிட வேண்டும். ஏனெனில், மார்பளவு தண்ணீரிலும் திக்கி, திணறாமல் அசராமல் செல்கிறது அந்த ஜீப்.

மஹிந்திரா ஜீப் மாடல்

மஹிந்திரா ஜீப் மாடல்

அலி சென்ற ஜீப் மாடல் தற்போது விற்பனையில் இருக்கும் மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு முந்தைய தலைமுறை மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராட்டுகள்

பாராட்டுகள்

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக தனது திறமையையும், உயிரை பொருட்படுத்தாது களத்தில் இறங்கிய ஜீப் அலியின் துணிச்சலையும் பாராட்ட வார்த்தைகளில்லை. அதேபோன்று, அந்த மஹிந்திரா ஜீப்பும் எம் மனதில் இடம்பிடித்துவிட்டது.

வீடியோ

வீடியோ

மார்பளவு தண்ணீரில் ஜீப்பை ஓட்டிச் செல்லும் அலியின் சாகசத்தை வீடியோவில் காணலாம். எமது ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த வீடியோவை காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்!

தினசரி இரவு 8.30 மணிக்கு...

தினசரி இரவு 8.30 மணிக்கு...

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் முக்கியச் செய்திகளின் தொகுப்பை எமது ஃபேஸ்புக் பக்கத்தில் இரவு 8.30 மணிக்கு காணத் தவறாதீர்!

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்!

  

English summary
Jeep Ali Driven Mahindra Jeep through 4 ft water to rescue people in Chennai.
Story first published: Thursday, December 3, 2015, 10:31 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more