ஜீப் எஸ்யூவி பிராண்டின் இந்திய இணையதள பக்கம் அறிமுகம்
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜீப் எஸ்யூவி பிராண்டின் அதிகாரப்பூர்வ இந்திய இணையதளம் இன்று செயல்பட துவங்கியிருக்கிறது.
ஜீப் எஸ்யூவி பிராண்டு தற்போது ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் வர்த்தகத்தை துவங்குவதற்கு ஏதுவாக, தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஜீப் இந்தியா நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது.

அத்துடன், ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களையும் இன்று துவங்கியிருக்கிறது. இது ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், வரும் பிப்ரவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஜீப் செரோக்கீ எஸ்ஆர்டி பிரிமியம் எஸ்யூவியையும், ரேங்க்லர் எஸ்யூவியையும் அறிமுகம் செய்யப்படுவதையும் உறுதி செய்திருக்கிறது.
இன்று உதயமாகியிருக்கும் ஜீப் இந்தியா இணைதள பக்கத்தில் ஜீப் செரோக்கீ எஸ்ஆர்டி மற்றும் ரேங்லர் எஸ்யூவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதுடன், அந்த நிறுவனத்தின் பாரம்பரியத்தை விளக்கும் விதத்தில் ஆண்டு வாரியாக விசேஷ தகவல்கள் மற்றும் படங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
நீங்களும் ஜீப் இந்தியா நிறுவனத்தின் இணையதள பக்கத்திற்கு ஒரு விசிட் அடியுங்களேன். ஜீப் இந்தியா இணையதளத்திற்கு செல்ல க்ளிக் செய்க.


Click it and Unblock the Notifications








