ஜீப் ரெனிகேட் காம்பேக்ட் எஸ்யூவி, 2016 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்?

By Ravichandran

ஜீப் ரெனிகேட் காம்பேக்ட் எஸ்யூவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய வாகன சந்தை தொடர்ந்து விரிவடைந்து வருவதால், ஒன்றன் பின் ஒன்றாக இந்திய கார் நிறுவனங்களும், வெளிநாட்டு கார் நிறுவனங்களும், புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

ஜீப் ரெனிகேட் காம்பேக்ட் எஸ்யூவி குறித்த கூடுதல் செய்திகளை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் அறிமுகம்;

இந்தியாவில் அறிமுகம்;

ஃபியட் க்ரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் குழுமம்தான் அமெரிக்காவின் ஜீப் கார் பிராண்டை நிர்வகித்து வருகின்றது.

ஜீப் பிராண்ட் நீண்ட காலமாக, இந்தியாவில் தங்கள் பிராண்டை தடம் பதிக்க முயற்சித்து வந்தது. இறுதியாக, ஜீப் நிறுவன தயாரிப்புகள் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது அறிமுகம் செய்யபடும் என தெரிகிறது.

இறக்குமதி;

இறக்குமதி;

சமீபத்தில் தான், ஜீப் பிராண்ட் தங்களின் ரெனிகேட்-டை இந்தியாவிற்கு இறக்குமதி செய்தது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இறக்குமதி செய்யபட்ட இந்த ஜீப் ரெனிகேட், 2.0 லிட்டர், டர்போ சார்ஜ்ட் எம்ஜேடி 2 டீசல் இஞ்ஜின், டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த ஜீப் ரெனிகேட், மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வராது என தெரிகிறது. இந்த புதிய ஜீப் 9-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

ஆனால், இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யபட உள்ள மாடலின் திறன் அளவுகள், சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் வாகனங்களின் திறன் குறியீடுகளை காட்டிலும், வேறுபட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

எக்ஸ்டீரியர்;

எக்ஸ்டீரியர்;

இந்த ஜீப் ரெனிகேட் காம்பேக்ட் எஸ்யூவியின் ஸ்டைலிங் மற்றும் டிசைன் (வடிவமைப்பு) தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.

புதிதாக அறிமுகம் செய்யபட உள்ள புதிய எஸ்யூவிக்கு, பழைய மாடல்களில் இருந்து பல்வேறு அம்சங்களை வடிவமைப்பாளர்கள் ஏற்று கொண்டுள்ளனர்.

ஒட்டு மொத்தத்தில், இது அர்பன் காம்பேக்ட் எஸ்யூவி போல் காட்சி அளிக்கிறது.

இதர அறிமுகங்கள்;

இதர அறிமுகங்கள்;

ஜீப் சார்பாக, ரெனிகேட் காம்பேக்ட் எஸ்யூவியுடன், வேறு சில மாடல்களும் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட உள்ளதாக தெரிகிறது.

தி ரேங்க்லர் மற்றும் ஷெரோக்கே எஸ்யூவி-கள் கட்டாயம் ஃபியட் ஸ்டாண்ட்களில் இடம் பெற உள்ளது.

இது வரை, 2 மாடல்களும் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் என உறுதியான தகவல்கள் இல்லை. எனினும், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கட்டாயம் அறிமுகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

விற்பனைக்கு எப்போது கிடைக்கும்?

விற்பனைக்கு எப்போது கிடைக்கும்?

இந்தியாவில், ஜீப் ரெனிகேட் காம்பேக்ட் எஸ்யூவி எப்போது விற்பனைக்கு கிடைக்கும் என்ற கேள்விகள் அனைவரது மனதிலும் உள்ளது.

இளம் மற்றும் ஜீப் ஆர்வலர்களை பிரத்யேகமாக மையபடுத்தி தயாரிக்கபடும் இந்த காம்பேக்ட் எஸ்யூவி 2017-ஆம் ஆண்டுக்கு முன்னதாக அறிமுகம் செய்யபட வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம்.

செய்திகள் உடனுக்குடன்

செய்திகள் உடனுக்குடன்

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

Most Read Articles
English summary
Jeep Renegade Compact SUV is expected to Debut at 2016 Auto Expo. Jeep brand is owned by the Fiat Chrysler Automobiles (FCA). FCA plans to launch the Renegade in India, probably in the year 2017. Young and Jeep enthusiasts are supposed to be the the target audience for this compact SUV.
Story first published: Saturday, December 12, 2015, 19:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X