கேடிஎம் டியூக் மற்றும் ஆர்சி பைக்குகளின் புதிய மாடல்கள் வருகின்றன

Written By:

வரும் 2017-ஆம் ஆண்டுக்குள் கேடிஎம் டியூக் மற்றும் கேடிஎம் ஆர்சி வகை மோட்டார்சைக்கிள்களின் புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

பல்வேறு நிறுவனங்கள் தங்களின் வாகனங்களின் அறிமுகங்கள் ஆன பின் மறுவடிவமைப்பது வழக்கமான விஷயமாகும். புதுப்பிக்கபட உள்ள கேடிஎம் டியூக் மற்றும் ஆர்சி ரேஞ்ஜ் மோட்டார்சைக்கிள்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

பஜாஜ் மூலம் இந்தியாவில் நுழைந்த கேடிஎம்;

பஜாஜ் மூலம் இந்தியாவில் நுழைந்த கேடிஎம்;

கேடிஎம் நிறுவனம், பஜாஜ் ஆட்டோ மூலம் 2012-ஆம் ஆண்டில் இந்தியாவில் பிரவேசம் செய்தது. இந்த பிரவேசம் டியூக் 200 மோட்டார்சைக்கிள் மூலம் நிகழ்ந்தது.

இதையடுத்து, கூடுதல் திறன்வாய்ந்த டியூக் 390 மோட்டார்சைக்கிள் என்ற இரு சக்கர வாகனம் அறிமுகம் செய்யபட்டது. பூனே அருகில் சகன் என்ற இடத்தில் உள்ள பஜாஜ் உற்பத்தி ஆலையில் தயாரிக்கபட்டு இங்கிருந்து பல்வேறு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகிறது.

தற்போது தயாரிக்கபடும் மாடல்கள்;

தற்போது தயாரிக்கபடும் மாடல்கள்;

தற்போதைய நிலையில், கேடிஎம் இந்தியா நிறுவனம் டியூக் 125, டியூக் 200, டியூக் 390, ஆர்சி125, மற்றும் ஆர்சி390 மாடல் மோட்டார்சைக்கிள்களை தயாரிக்கின்றது.

2017-க்குள் மேம்படுத்த திட்டம்;

2017-க்குள் மேம்படுத்த திட்டம்;

சகன் உற்பத்தி ஆலையில் தயாரிக்கபடும் இந்த மாடல்கள், பல்வேறு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகிறது. ஆஸ்திரியா மையமாக கொண்ட இந்த கேடிஎம் நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கபடும் டியூக் மற்றும் ஆர்சி ரேஞ்ஜ்களை 2017-ஆம் ஆண்டுக்குள் மேம்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

2016-ல் செய்யபட உள்ள மேம்பாடுகள்;

2016-ல் செய்யபட உள்ள மேம்பாடுகள்;

டியூக் மற்றும் ஆர்சி ரேஞ்ஜ் மோட்டார்சைக்கிள்கள், 2016-ஆம் ஆண்டில் சில மேம்பாடுகளுடன் வெளியாக உள்ளது.

டியூக் 390 மற்றும் ஆர்சி390 மாடல்களை, ரைட்-பை-ஆக்சிலரேட்டர் வசதியுடன், கேடிஎம் நிறுவனம் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், ஸ்லிப்பர் கிளட்ச் (ஆர்சி 390 மோட்டர்சைக்கிளுக்கு), அட்ஜஸ்டபிள் லிவர்கள், பெரிய ஃப்ரண்ட் டிஸ்க் மற்றும் கேளிப்பர் உள்ளிட்டவையும் சேர்க்கபட உள்ளது.

2017-ஆம் ஆண்டுக்கான மாற்றங்கள்;

2017-ஆம் ஆண்டுக்கான மாற்றங்கள்;

2017-ஆம் ஆண்டில் செய்யபட மாற்றங்களின் ஒரு பகுதியாக, டியூக் மற்றும் ஆர்சி ரேஞ்ஜ் மோட்டார்சைக்கிளுக்கு புதிய இஞ்ஜின் பிளாட்ஃபார்ம் உபயோகிக்கபட உள்ளது.

இதோடு மட்டுமல்லாமல், வேறு பல்வேறு மாற்றங்களும் செய்யபட உள்ளது. 2017-ஆம் ஆண்டுக்கான மேம்பாடுகளில், கார்னரிங் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கபடலாம் என வதந்திகள் வெளியாகிறது.

விலைகள் நிர்ணயத்தில் அனுகூலம்;

விலைகள் நிர்ணயத்தில் அனுகூலம்;

போட்டி நிறுவனங்களை காட்டிலும், கேடிஎம் மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தைகளிலும், சர்வதேச சந்தைகளிலும், மிகவும் போட்டிகரமான முறையில், விலை நிர்ணயம் செய்யபடுகிறது.

கேடிஎம் சார்பாக தொடர்ந்து பல்வேறு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யபட உள்ளது. இந்நிலையில், கேடிஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்திடம் இருந்து பிற போட்டி நிறுவனங்களுக்கு, கடுமையான போட்டி எழ உள்ளது.

அனைத்து மாடல்களும் கிடைக்கிறது;

அனைத்து மாடல்களும் கிடைக்கிறது;

கேடிஎம் டியூக் மற்றும் ஆர்சி ரேஞ்ஜ்-களில் அனைத்து மோட்டார்சைக்கிள்களும் இந்தியாவில் கிடைக்க உள்ளது. இதற்கு முக்கிய காரணம், இவை இந்தியாவின் பூனே அருகில் உள்ள சகன் உற்பத்தி ஆலையில் தயாரிக்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

கேடிஎம் பைக்குகளின் விலை உயர்வு - முழு விபரம்

முக்கிய மாற்றங்களுடன் 2016 கேடிஎம் ஆர்சி390 பைக் அறிமுகம் - விபரம்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

2 சக்கர வாகன செய்திகள்

4 சக்கர வாகன செய்திகள்

English summary
KTM Duke & RC Range motorcycles are to be globally revamped by the year 2017. KTM was brought to India by Bajaj Auto during 2012 with the introduction of Duke 200. Later, a more powerful machine called the Duke 390 motorcycle was introduced. KTM uses Bajaj's Chakan facility to make motorcycles and export it to other markets.
Story first published: Wednesday, December 30, 2015, 15:19 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark