லம்போர்கினி அவென்டேடார் சூப்பர்வெலாஸ் ரோட்ஸ்டெர்... முன்பதிவுக்கு முந்துங்கள்...!!

By Saravana

இங்கிலாந்தில் நடந்து வரும் புகழ்பெற்ற குட்வுட் ஸ்பீடு மோட்டார் திருவிழாவில், லம்போர்கினி நிறுவனம் தனது புதிய கார் மாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

ஆம், லம்போர்கினி அவென்டேடார் சூப்பர்வெலாஸ் காரின் ரோட்ஸ்டெர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கூரை இல்லாத அமைப்பு கொண்ட இந்த காரை லிமிடேட் எடிசனாக விற்பனை செய்யப்பட உள்ளது.

சூப்பர்வெலாஸ் ரோட்ஸ்டெர்

சூப்பர்வெலாஸ் ரோட்ஸ்டெர்

லம்போர்கினி அவென்டேடார் காரின் கூடுதல் சக்தி கொண்ட மாடல்தான் சூப்பர்வெலாஸ். அவென்டேடார் காரைவிட 50 கிலோ குறைவான எடை கொண்ட இந்த காரின் எஞ்சின் கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூன் செய்யப்பட்டிருக்கிறது.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

மொத்தம் 500 கார்களை மட்டுமே அவென்டேடார் சூப்பர்வெலாஸ் ரோட்ஸ்டெர் பதிப்பில் விற்பனை செய்ய இருப்பதாக லம்போர்கினி நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்பதிவு

முன்பதிவு

உலக அளவில் 130 டீலர்களை லம்போர்கினி பெற்றிருக்கிறது. இந்த அனைத்து ஷோரூம்களிலும் இந்த புதிய மாடலுக்கான முன்பதிவு இப்போது துவங்கிவிட்டது.

 எஞ்சின்

எஞ்சின்

அவென்டேடார் சூப்பர்வெலாஸ் மற்றும் அதன் ரோட்ஸ்டெர் எனப்படும் கூரை இல்லாத திறந்த அமைப்பு கொண்ட மாடல் என இரண்டிலும், 740 எச்பி பவரை அதிகபட்சம் வழங்கக்கூடிய வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 -96 கிமீ வேகத்தை 2.8 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 349 கிமீ வேகம் வரை எட்டக்கூடியது.

வரவேற்பு

வரவேற்பு

ஏற்கனவே, அவென்டேடார் சூப்பர்வெலாஸ் மாடலில் அறிவிக்கப்பட்ட 600 கார்களுக்கும் முன்பதிவு முடிந்த நிலையில், அதன் ரோட்ஸ்டெர் வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய மாடலுக்கும் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 1, 2015, 12:07 [IST]
English summary
Lamborghini also made an announcement at 2015 Goodwood Festival of Speed. They confirmed the production of Aventador LP 750-4 Superveloce Roadster.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+