லம்போர்கினி ஹுராகேன் ஸ்பைடர் எல்பி 610-4, விரைவில் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

லம்போர்கினி ஹுராகேன் ஸ்பைடர் எல்பி 610-4 எதிர்பார்த்ததை விட முன்னதாகவே இந்தியாவில் அறிமுகம் செய்யபட்ட உள்ளது.

இந்தியாவில் சொகுசு சந்தை வேகமாக வளர்ந்து வருகின்றது. இந்திய சொகுசு கார் நிறுவனங்களும், பன்னாட்டு சொகுசு கார் நிறுவனங்களும் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்டு, இந்திய சொகுசு சந்தை நோக்கி படை எடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் அறிமுகம் ;

இந்தியாவில் அறிமுகம் ;

லம்போர்கினி ஹுராகேன் ஸ்பைடர் எல்பி 610-4 எதிர்பார்த்ததை விட, இந்தியாவில் முன் கூட்டியே அறிமுகம் செய்யபடலாம் என தெரிகின்றது.

அறிமுகம் குறித்து எந்த தேதியும் குறிப்பிட்டு நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், லம்போர்கினி டெல்லி தங்களின் இந்த புதிய ஹுராகேன் ஸ்பைடர் குறித்த படங்களை ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

ஸ்பைடர் டேக்;

ஸ்பைடர் டேக்;

லம்போர்கினி நிறுவனம், தாங்கள் தயாரிக்கும் அனைத்து கன்வர்டிபிள் தயாரிப்புகளுக்கும், ஸ்பைடர் டேக்-கை இணைத்து கொள்கின்றனர். தற்போது விற்கபடும் அனைத்து மாடல்களிலும் ஸ்பைடர் அறிமுகம் செய்யபடுகின்றது.

நுழைவு நிலை சூப்பர் கார்;

நுழைவு நிலை சூப்பர் கார்;

ஹுராகேன் தான், லம்போர்கினி நிறுவனம் சார்பாக வழங்கபடும் நுழைவு நிலை சூப்பர் கார் ஆகும்.

லம்போர்கினி அதன் அனைத்து சர்வதேச சந்தைகளிலும் ஹுராகேன் ஸ்பைடர் காரை வழங்குகின்றது. அவ்வ்கையில், ஹுராகேன் ஸ்பைடர் மாடலை இந்திய வாடிக்கையாளர்களுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளது.

எடை;

எடை;

லம்போர்கினியின் ஹுராகேன் காரின் எடையை பராமரிக்க, பராமரிக்க ஸ்பைடர் வழித்தோன்றல் கார்கள் குறைந்த எடை கொண்ட பொருட்களை உபயோகிக்கின்றனர்.

மணிக்கு 50 கிலோமிட்டருக்கும் குறைவான வேகத்தில், விருப்பபட்டால் இதன் மேற்கூரையை 18 நொடிகளுக்குள் உள்ளிழுத்து கொள்ளலாம். இப்படியாக, இதன் முழு மேற்கூரையும் விலகி ஜொலிக்கும் சூரியனை ரசிக்கலாம்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

லம்போர்கினியின் ஹுராகேன் ஸ்பைடர் மாடல், 5. லிட்டர், வி10, நேச்சுரலி ஆஸ்பிரேடட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின் 610 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 560 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த காரின் இஞ்ஜின் 7-ஸ்பீட் ட்யூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

டிரைவிங் மோட்கள்;

டிரைவிங் மோட்கள்;

லம்போர்கினியின் ஹுராகேன் ஸ்பைடர் எல்பி 610-4 கார், 3 விதமான டிரைவிங் மோட்களை கொண்டுள்ளது.

இதன் டிரைவிங் மோட்கள், ஸ்ட்ராடா, ஸ்போர்ட் மற்றும் கோர்ஸா என்று பெயரிடபட்டுள்ளது.

திறன்;

திறன்;

லம்போர்கினியின் ஹுராகேன் ஸ்பைடர் எல்பி 610-4 மாடல், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 200 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 10.2 நொடிகளில் எட்டிவிடும்.

இந்த ஹுராகேன் ஸ்பைடர் எல்பி 610-4 மாடல் கார், உச்சபட்சமாக மணிக்கு 324 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

விலை விவரம்;

விலை விவரம்;

லம்போர்கினியின் ஹுராகேன் ஸ்பைடர் எல்பி 610-4 மாடலின் விலை குறித்து எந்த விதமான தகவல்களும் முறையாக வெளியிடப்படவில்லை.

சமீபத்தில் தான், லம்போர்கினியின் ஹுராகேன் ஆர்டபுள்யூடி கார், இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்யபட்டது. இதன் விலை 2.99 கோடி (எக்ஸ்-ஷோரும் டெல்லி) ரூபாய் ஆகும்.

இதர தொடர்பான செய்திகள்;

இதர தொடர்பான செய்திகள்;

லம்போர்கினி ஹூராகென் 2 வீல் டிரைவ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது

Most Read Articles
English summary
Lamborghini Huracan Spyder India Launch might happen sooner than expected earlier. Official date for the launch of The Huracan Spyder LP 610-4 has not been set until Now. But, Lamborghini Delhi has released the recent images of the Huracan Spyder through their Facebook page.
Story first published: Thursday, December 3, 2015, 11:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X