லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்

By Saravana

இந்தியாவில் லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் சொகுசு எஸ்யூவி மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் 5வது லேண்ட்ரோவர் கார் மாடலாக இந்த புதிய எஸ்யூவி வகை கார் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஒரே டீசல் எஞ்சின் ஆப்ஷனில், மொத்தம் 4 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஃப்ரீலேண்டர் எஸ்யூவிக்கு மாற்று

ஃப்ரீலேண்டர் எஸ்யூவிக்கு மாற்று

இந்தியாவில் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் விற்பனையில் முக்கிய பங்களித்து வரும் ஃப்ரீலேண்டர் எஸ்யூவிக்கு மாற்றாக இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. S, SE, HSE மற்றும் HSE luxury ஆகிய 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

சிறப்பான இருக்கை வசதி

சிறப்பான இருக்கை வசதி

இந்த எஸ்யூவி 5 பேர் மற்றும் 7 பேர் வரை பயணிக்கும் இருக்கை வசதி அமைப்பு கொண்டதாக கிடைக்கும். போட்டியாளர்களான ஆடி க்யூ5, பிஎம்டபிள்யூ எக்ஸ்3, வால்வோ எக்ஸ்சி60 ஆகிய மாடல்கள் 5 பேர் பயணிக்கும் இடவசதி கொண்டவை. ஆனால், இந்த கார் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என இரு விதமான மாடல்களில் கிடைப்பது, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும்.

ஆஃப்ரோடு மாடல்

ஆஃப்ரோடு மாடல்

இந்த எஸ்யூவி மிகச் சிறப்பான ஆஃப்ரோடு மாடலாகவும் பயன்படுத்தும் தொழில்நுட்ப வசதிகளை கொண்டது. நீரோடைகள், ஆறுகளை கடக்கும்போது, 600மிமீ ஆழம் வரையில் தண்ணீரில் செல்லும். மேலும், டெர்ரெய்ன் ரெஸ்பான்ஸ் சிஸ்டமும் உள்ளது. புல் தரை, பனி படர்ந்த சாலை, சேறு, சகதி நிறைந்த சாலை, மணற்பாங்கான பகுதிகளுக்கு தகுந்தவாறு டிரைவிங் ஆப்ஷனை மாற்றிக் கொள்ள முடியும்.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

சரிவான சாலைகளில் பாதுகாப்பாக காரை செலுத்துவதற்கான ஹில் டிசென்ட் கன்ட்ரோல், கார் கவிழாமல் அதிக நிலைத்தன்மையுடன் செலுத்தும் ரோல் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் தொழில்நுட்பங்கள், ஏழு உயிர்காக்கும் காற்றுப்பைகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற ஏராளமான பாதுகாப்பு மற்றும் ஆஃப்ரோடிங் செய்வதற்கான பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது.

 வசதிகள்

வசதிகள்

லெதர் இருக்கைகள், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 17 ஸ்பீக்கர்களுடன் கூடிய மெரிடியன் மியூசிக் சிஸ்டம், 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.

எஞ்சின்

எஞ்சின்

இந்த எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. ஆனால், இருவிதமான சக்தி கொண்டதாக கிடைக்கும். பேஸ் மற்றும் நடுத்தர வகை வேரியண்ட்டுகள் 148 பிஎச்பி பவர் கொண்டதாகவும், HSE Luxury என்ற உயர்வகை மாடலில் இருக்கும் அதே எஞ்சின் 188 பிஎச்பி பவர் கொண்டதாகவும் கிடைக்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

பேஸ் மாடல்: ரூ.46.10 லட்சம் [5 சீட்டர்]

எஸ்இ 5 சீட்டர்: ரூ.51.01 லட்சம்

எஸ்இ 7 சீட்டர்: ரூ.52.50 லட்சம்

எச்எஸ்இ 5 சீட்டர்: ரூ.53.34 லட்சம்

எச்எஸ்இ 7 சீட்டர்: ரூ.54.83 லட்சம்

எச்எஸ்இ லக்சுரி 5 சீட்டர்: ரூ.60.70 லட்சம்

எச்எஸ்இ லக்சுரி 7 சீட்டர்: ரூ.62.18 லட்சம்

[மும்பை எக்ஸ்ஷோரூம் விலை]

More from DriveSpark

Article Published On: Wednesday, September 2, 2015, 16:34 [IST]
English summary
The new Land Rover Discovery Sport was launched in the country today, at an event in . Let's take a closer look at the new vehicle. Land Rover Discovery Sport Pricing: The new Land Rover Discovery Sport is priced starting at INR 46.10 lakh (ex-showroom Mumbai).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+