இந்தியாவில், ஏஎம்டி கியர்பாக்ஸ் உற்பத்தி ஆலையை திறந்த மேக்னெட்டி மரேல்லி!

By Ravichandran

இந்தியாவில், ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ்களை [ஏஎம்டி] உற்பத்தி செய்வதற்கான புதிய ஆலையை மேக்னெட்டி மரேல்லி நிறுவனம் திறந்துள்ளது.

இந்தியாவில், ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களுக்கு அதிக டிமான்ட் இருந்து வருகிறது. இந்தநிலையில், ஏஎம்டி கியர்பாக்ஸ் இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட கால தாமதத்தால், ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாக விற்கப்படும் கார் மாடல்களின் காத்திருப்பு காலம் மிக அதிகமாக இருந்தது.

இதையடுத்து, தேவையை விரைவாக நிறைவு செய்யும் விதத்தில், இந்தியாவிலேயே ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆலையை திறந்திருக்கிறது இத்தாலியை சேர்ந்த மேக்னெட்டி மரேல்லி நிறுவனம். இந்த புதிய ஆலை, ஹரியானாவில் உள்ள மானேஸர் எனும் இடத்தில் திறக்கப்பட்டுள்ளது.

Magneti Marelli Inaugurates A New Plant For Manufacturing AMT Transmissions

மேக்னெட்டி மரேல்லியின் இந்தியா பிரிவு, இத்தாலியை சேர்ந்த ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் துணை நிறுவனமாகும். தற்போது மாருதி சுசுகி மற்றும் சுசூகி மோட்டார் இடையிலான கூட்டு ஒப்பந்த முயற்சியில், இந்த புதிய ஆலை மானேஸரில் உள்ள மாருதி சுசுகியின் டவுன்ஷிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலையில், மாதத்திற்கு 10,000 ஏ.எம்.டி டிரான்ஸ்மிஷன்கள் உருவாக்கப்பட உள்ளது. 2016ம் ஆண்டு இறுதியில் அல்லது 2017-ஆம் ஆண்டு ஆரம்பத்திற்குள் ஆண்டுக்கு 2,80,000 ஏ.எம்.டி டிரான்ஸ்மிஷன்கள் என்ற உச்சகட்ட தயாரிப்பு எட்டப்படும் என தெரிகிறது.

ஏ.எம்.டி-க்களின் பெருகிவரும் தேவையை இந்த தொழிற்சாலை பூர்த்தி செய்யும். முன்னதாக 2014-ல், செலரியோ மற்றும் ஆல்டோ கே10 உள்ளிட்ட கார்களில் மாருதி சுசுகி ஏ.எம்.டி-க்களை அறிமுகப்படுத்தியது. தற்போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ மற்றும் ஸெஸ்ட் கார்களில் ஏ.எம்.டி கியர்பாக்ஸ்களுடன் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக மேக்னெட்டி மரேல்லி ஏ.எம்.டி-க்களை இத்தாலியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்தது. இனி, இந்த 150 கோடி ரூபாய் செலவில், 7500 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள தொழிற்சாலையிலேயே ஏ.எம்.டி கியர்பாக்ஸ்கள் தயாரிக்கப்படும்.

க்ளட்ச்சை கால்களால் இயக்க வேண்டிய கட்டாயத்தை குறைப்பதால், தற்போது ஏஎம்டி கியர்பாக்ஸ்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. மேலும், அதிக மைலேஜ் தரும் என்பதும் இந்த கியர்பாக்ஸ்களின் சிறப்பம்சமாக கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 21, 2015, 8:31 [IST]
English summary
Magneti Marelli Inaugurates New Plant For Manufacturing AMT Transmissions in Manesar, Haryana. The new plant is located within the Maruti Suzuki township in Manesar will roll out 10,000 AMT Transmissions units monthly initially.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+