சாங்யாங் டிவோலி காம்பேக்ட் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டம்!

Written By:

வரும் பிப்ரவரி மாதம் டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் நடைபெற உள்ள சர்வதேச வாகன கண்காட்சியில், சாங்யாங் டிவோலி காம்பேக்ட் எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மஹிந்திரா எந்த தகவலையும் இதுவரை உறுதி செய்யவில்லை.

இதுகுறித்து ஆட்டோமொபைல் இணையதளங்களில், யூகங்களின் அடிப்படையில் வெளியான தகவல்களை உறுதி செய்யும் விதத்தில், சாங்யாங் டிவோலி எஸ்யூவியின் சாலை சோதனை ஓட்டங்கள் இந்தியாவில் துவங்கப்பட்டிருக்கின்றன. பெங்களூரில் சோதனை செய்யப்பட்டுக்கொண்டிருந்த இந்த எஸ்யூவியை ஆட்டோமொபைல் இணையதள வாசகர் ஒருவர் படம் பிடித்து வெளியிட்டிருக்கிறார்.

சாங்யாங் போட்டியாளர்கள்

சாங்யாங் போட்டியாளர்கள்

ஒருவேளை, இந்தியாவில் சாங்யாங் டிவோலி எஸ்யூவியை மஹிந்திரா விற்பனைக்கு அறிமுகம் செய்தால், ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ டஸ்ட்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

டீசல் எஞ்சின் ஆப்ஷன்

டீசல் எஞ்சின் ஆப்ஷன்

இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் பட்சத்தில், 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக வரும். அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருக்கும் ஜப்பானை சேர்ந்த அய்சின் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்படும்.

பெட்ரோல் எஞ்சின் மாடல்

பெட்ரோல் எஞ்சின் மாடல்

பெட்ரோல் மாடலில் 128 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதுவும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும். இங்கிலாந்து மார்க்கெட்டில் பெட்ரோல் மாடல் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தில் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், டீசல் மாடல் 2 வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்ங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தி

இந்தியாவில் உற்பத்தி

சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியை போன்றே, இந்த மாடலும் மஹிந்திரா ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும். எனவே, போட்டியாளர்களுக்கு சவால் தரும் விலையில் வரும் வாய்ப்புள்ளது.

 விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியை மஹிந்திரா விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

English summary
Ssangyong has commenced testing its all-new premium compact SUV on Indian roads. The Tivoli compact SUV model is currently on sale in the European markets and is doing extremely well. Ssangyong is a Korean brand and is currently owned by Mahindra who has a majority stake in the automotive outfit.
Story first published: Wednesday, December 30, 2015, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark