மஹிந்திரா சுப்ரோ 8 சீட்டர் மினி வேன் மற்றும் மினி டிரக் அறிமுகம்!
மஹிந்திரா நிறுவனம் புதிய 8 சீட்டர் மினி வேன் மற்றும் மினி டிரக் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
மாருதி ஓம்னி, டாடா வென்ச்சர் ஆகிய மாடல்களுடன் இந்த புதிய மஹிந்திரா மினி வேன் போட்டி போடும். அதேபோன்று, டாடா ஏஸ் மெகா மினி டிரக்கிற்கு நேர் எதிர்கா சுப்ரோ மினி டிரக் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த இரு மாடல்களின் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

பயணிகள் வேன்
8 பேர் செல்வதற்கான இருக்கை வசதியுடன் மஹிந்திரா சுப்ரோ பயணிகள் வேன் வந்திருக்கிறது.

மினி டிரக்
ஒரு டன் எடை சுமக்கும் திறன் கொண்டதாக சுப்ரோ மேக்ஸி டிரக் வந்திருக்கிறது.

எஞ்சின்
இந்த இரு மாடல்களிலும் 45 எச்பி பவரையும், 98 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக அளிக்க வல்ல டைரக்ட் இன்ஜெக்ஷன் நுட்பம் கொண்ட 909சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இரண்டு மாடல்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

மைலேஜ்
மஹிந்திரா சுப்ரோ பயணிகள் மினி வேன் லிட்டருக்கு 23.5 கிமீ மைலேஜையும், சுப்ரோ மேக்ஸி டிரக் லிட்டருக்கு 22.4 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முக்கிய வசதிகள்
பேஸ் வேரியண்ட்டுகளில் ஏசி வசதி மற்றும் பவர் ஸ்டீயரிங் கிடையாது. உயர் வேரியண்ட்டுகளில் இந்த வசதி இருக்கிறது. மொபைல் சார்ஜர், பொருட்கள் வைப்பதற்கான சிறப்பான இடவசதியை சுப்ரோ மினி வேன் கொண்டுள்ளது. 8 இருக்கைகள் மற்றும் 5 இருக்கைகள் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

விலை விபரம்
சுப்ரோ பயணிகள் வேன்
எல்எக்ஸ்: ரூ.4.38 லட்சம்
விஎக்ஸ்: ரூ.4.63 லட்சம்
இசட்எக்ஸ்: ரூ.4.93 லட்சம்
தானே நகர எக்ஸ்ஷோரூம் விலைகள்

விலை விபரம்
மஹிந்திரா சுப்ரோ மேக்ஸி டிரக்
டி2: ரூ.4.25 லட்சம்
டி4: ரூ.4.45 லட்சம்
டி6: ரூ.4.75 லட்சம்
தானே நகர எக்ஸ்ஷோரூம் விலைகள்


Click it and Unblock the Notifications








