மஹிந்திரா மான்சூன் சேலஞ்ச் ராலி பந்தயம் இன்று துவங்குகிறது!
மஹிந்திரா மான்சூன் சேலஞ்ச் ராலி பந்தயம் பெங்களூரில் இன்று துவங்குகிறது. சியட் நிறுவனத்துடன் இணைந்து இந்த போட்டியை மஹிந்திரா ஏற்பாடு செய்திருக்கிறது.
மஹிந்திரா அட்வென்ச்சர் பிரிவின் கீழ் இந்த போட்டிகளை கடந்த 4 ஆண்டுகளாக மஹிந்திரா நடத்தி வருகிறது. இந்த ஆண்டு போட்டியில் 26 வாகனங்கள் பங்கேற்கின்றன. போட்டியாளர்கள் தங்களது வாகனங்களில் 700 கிமீ தூரத்தை மூன்று நாட்களில் கடும் சவால்களை கடந்து தொட வேண்டியிருக்கும்.

தென் இந்தியா மட்டுமின்றி, வட இந்தியாவிலும் பல்வேறு போட்டிகளை மஹிந்திரா அட்வென்ச்சர் பிரிவு நடத்தி வருகிறது. இன்று துவங்க இருக்கும் மஹிந்திரா மான்சூன் சேலஞ்ச் போட்டி, பெங்களூரில் உள்ள ஓரியன் வணிக வளாகத்திலிருந்து துவங்குகிறது.
மஹிந்திரா வாடிக்கையாளர்கள் பெருமளவில் இந்த போட்டியில் பங்குகொள்கின்றனர். இது அவர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை வழங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications








