25ந் தேதி விற்பனைக்கு வருகிறது புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500!
கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் டிசைன் மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்டிருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 நாளை மறுதினம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த புதிய மாடலை பிரபலப்படுத்தும் முயற்சிகளை மஹிந்திரா மேற்கொண்டிருக்கிறது. மேலும், புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவிக்கு ஒரு பரிசுப் போட்டியையும் அறிவித்துள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறுபவருக்கு புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 500யை வெல்லும் வாய்ப்பையும், இரண்டாவது இடத்தை பெறுவோர்க்கு மஹிந்திரா அட்வென்ச்சர் மோனாஸ்டரி எஸ்கேப்பில் பங்கு பெறும் வாய்ப்பையும் பெற முடியும்.
மேலும், 5 ஐ-பேட் மற்றும் மஹிந்திரா மெர்சன்டைஸ் மூலம் பிரத்யேக பரிசுப் பொருட்களை பெறும் வாய்ப்பையும் பெற முடியும். புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மாடலில் தோற்றத்தில் மாறுதல்கள் மற்றும் கூடுதல் வசதிகளை கொண்டு வருகிறது. ஆனால், முந்தைய மாடலில் இருந்த அதே எஞ்சின்தான், புதிய மாடலிலும் இடம்பெற்றிருக்கும்.


Click it and Unblock the Notifications








