மஹிந்திரா மினி எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள்!
மஹிந்திரா மினி எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள் வெளியாகியிருக்கின்றன. முதல்முறையாக, பெரும்பாலான பகுதிகளில் முக்காடு விலக்கப்பட்டு 75 சதவீதம் அளவுக்கு கார் எப்படியிருக்கும் என்பதை அனுமானிக்க முடிகிறது.
விளம்பர படத்திற்காக நடத்தப்பட்ட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட படங்களை இன்டியன் ஆட்டோஸ்ப்ளாக் தளத்தின் மூலமாக தற்போது வெளியாகியிருக்கின்றன. அந்த ஸ்பை படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

குறியீட்டுப் பெயர்
இதுவரை மஹிந்திரா எஸ்101 என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய மினி எஸ்யூவி, மஹிந்திராவின் பிரபலமான எக்ஸ்யூவி500வின் மினி மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோற்றம்
ஸ்பை படங்களில் முன்புறம் கருப்பு துணிகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், பானட்டின் மீது கேமரா உள்ளிட்ட சாதனங்கள் பொருத்தப்பட்டு ஷூட் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பக்கவாட்டு டிசைனையும், பின்புற டிசைனையும் முழுமையாக பார்க்க முடிகிறது.

எஸ்யூவி லட்சணங்கள்
பிளாஸ்டிக் பம்பர், வீல் ஆர்ச்சுகளுக்கு பிளாஸ்டிக்கிலான வளைவு ஒன்று பொருத்தப்பட்டு எஸ்யூவி என காட்டும் விதத்தில், டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. பின்புறத்தில் ரியர் வைப்பர், ரூஃப் ரெயில்களும் இருக்கின்றன. செவர்லே பீட் காரில் இருப்பது போன்ற கதவு கைப்பிடிகளை காண முடிகிறது.

இன்டிரியர்
இந்த எஸ்யூவியில் கியர் நாப் டேஷ்போர்டில் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம், முன்புறத்தில் மூன்று பேரும், பின்புறத்தில் மூன்று பேரும் செல்வதற்கான இடவசதியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

எஞ்சின் ஆப்ஷன்
இந்த மினி எஸ்யூவியில் புதிய 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகம்
ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சத்திற்குள் ஆரம்ப விலை கொண்டதாக எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மினி எஸ்யூவி அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








