மஹிந்திராவின் புதிய மினி எஸ்யூவியின் டீசர் வெளியீடு: நாளை அறிமுகமாகிறது

Written By:

மஹிந்திரா எஸ்101 என்ற குறியீட்டு பெயர் சூட்டபட்டுள்ள எஸ்யூவியின் டீசர், அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடபட்டு உள்ளது.

மஹிந்திரா நிறுவனம், தங்களின் அடுத்தடுத்த புதிய கார்களின் அறிமுகத்தின் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளது. அடுத்த வெளியாக உள்ள வாகனத்தின் கூடுதல் செய்திகளை வரும் செய்திகளில் காணலாம்.

புதிய வாகனத்தின் அறிமுக நிகழ்ச்சி;

புதிய வாகனத்தின் அறிமுக நிகழ்ச்சி;

மஹிந்திரா நிறுவனம் அடுத்து வெளியிடப்பட உள்ள அதிகாரப்பூர்வ அறிமுகமாகும் நிகழ்ச்சி, டிசம்பர் 18, 2015-ல் நடக்க உள்ளது.

அதற்கு முன்னதாக, எஸ்101 என்ற குறியீட்டு பெயர் சூட்டபட்டுள்ள இந்த புதிய காரின் புகைப்படம், அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடபட்டு டீஸ் செய்யபட்டது.

வடிவமைப்பு;

வடிவமைப்பு;

மஹிந்திரா எஸ்101 என்ற இந்த புதிய கார், 3 சிலிண்டர்கள் கொண்ட புதிய பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின்கள் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின்கள், மஹிந்திரா நிறுவனத்தினால் சொந்தமாக உருவாக்கபட்டது என்பது குறிப்பிடதக்கது.

Images Via IAB

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மஹிந்திரா நிறுவனத்தின் இந்த 2 இஞ்ஜின்களும், 1.2 லிட்டர் சிசி கொண்டதாக இருக்கும்.

ஆரம்பகட்டத்தில், மேனுவல் கியர்பார்கஸுடன் கிடைக்க உள்ள மஹிந்திரா எஸ்101, வருங்காலங்களில் ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸுடன் வெளியாக உள்ளது.

Images Via IAB

பெரிய வரம்;

பெரிய வரம்;

2000 சிசி மற்றும் அதற்கும் கூடுதலான சிசி-களுடன் தான், மஹிந்திரா நிறுவனத்தின் அதிகபடியான வாகனங்கள் விற்கபடுகின்றது.

டெல்லி பகுதிகளில் புதிய சட்டங்கள் அமலாவதை அடுத்து, மஹிந்திரா நிறுவனத்தின் பல்வேறு கார்கள் டெல்லியில் தடை செய்யபட வாய்ப்புகள் உள்ளது.

இந்த நிலையில், மஹிந்திரா எஸ்101 காரின் வெளியீடு, சந்தை நிலவரத்தை காத்து கொள்ள, அந்த நிறுவனத்திற்கு பெரிய வரம் போல் அமைய உள்ளது.

Images Via IAB

தோற்றம்;

தோற்றம்;

முன் தோற்றத்தின் படி, மஹிந்திரா எஸ்101 காரின் தோற்றம், மஹிந்திரா எக்ஸ்யூவி-யை போன்றே காட்சியளிக்கிறது.

இந்த எஸ் 101 பல்வேறு முறைகள், சாலைகளில் கேமோஃப்லாஜ் எனப்படும் கடுமையான உருமறைப்புடன் பரிசோதிக்கபட்டது. ஒரு முறை, மஹிந்திரா எஸ்101 உருமறைப்பு செய்யபடாமலும் சாலைகளில் பரிசோதிக்கபட்டது.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
Images of the Mahindra's new vehicle, which is codenamed as Mahindra S101 was teased on the Mahindra's official official website, prior to the official naming ceremony. Mahindra S101 is to be officially named on December 18th 2015. Mahindra S101 would have Mahindra's all-new three-cylinder petrol and diesel engines, which was developed in house.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark