டெல்லியில் தடை: பெட்ரோல் இன்ஜின்களுடன் களமிறங்கும் மஹிந்திரா எஸ்யூவிகள்!

By Ravichandran

மஹிந்திராவின் ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 வாகனங்கள், பெட்ரோல் இஞ்ஜினுடன் விரைவில் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டெல்லியில் டீசல் இஞ்ஜின்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் கார்களுக்கு தடை விதிப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றது.

இதற்கு தீர்வாக மஹிந்திரா நிறுவனம் செய்ய உள்ள அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்வோம்.

டீசல் வாகனங்களுக்கு தடை;

டீசல் வாகனங்களுக்கு தடை;

டெல்லி அரசு டீசல் வாகனங்களுக்கான தடையை வரும் ஜனவரி 1, 2016 முதல் அமல்படுத்த உள்ளது.

இந்த தடையின் படி, 2000 சிசி-க்கும் கூடுதலான இஞ்ஜின்கள் கொண்ட கார்களின் விற்பனை தடை செய்யபட உள்ளது. அதையடுத்து, எந்த வாகன உற்பத்தியாளர்களும், டெல்லி என்சிஆர் பகுதிகளில் டீசல் வாகனங்களின் விற்பனை வரும் மார்ச் 31, 2016 வரை தடை செய்யபட உள்ளது.

மார்ச் 31, 2016-க்கு பின்பு, டீசல் வாகனங்களின் மீதான தடை நீட்டிப்பதா அல்லது நீக்குவதா என்பது குறித்த முடிவு எடுக்கபட உள்ளது.

கடுமையாக பாதிக்கபட்ட மஹிந்திரா;

கடுமையாக பாதிக்கபட்ட மஹிந்திரா;

டெல்லி அரசு மூலம் மேற்கொள்ளபட உள்ள இந்த தடையினால் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தான அதிகமாக பாதிக்கபட்டுள்ளது.

இதற்கு காரணம், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் சார்பாக சந்தையில் விற்கபடும் பல்வேறு புகழ்வாய்ந்த கார்கள் டீசல் இஞ்ஜின்களை கொண்டு இயங்குகிறது.

ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 கார்களும் கூட 2.2 லிட்டர் டீசல் இஞ்ஜின்களை கொண்டுள்ளது.

மஹிந்திராவின் முக்கிய சந்தை டெல்லி;

மஹிந்திராவின் முக்கிய சந்தை டெல்லி;

மஹிந்திரா நிறுவனத்திற்கு, டெல்லி மிக முக்கியமான சந்தையாக விளங்குகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனையில் சுமார் 2 சதவிகிததிற்கான விற்பனை டெல்லி பகுதியில் மட்டுமே குவிகிறது.

பெட்ரோல் இஞ்ஜின்களை ஏற்ற மஹிந்திரா;

பெட்ரோல் இஞ்ஜின்களை ஏற்ற மஹிந்திரா;

மஹிந்திரா நிறுவனத்தின் பெரும்பாலான மாடல்களின் இஞ்ஜின்கள் டீசலை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது.

சமீபத்தில் தான், விரைவில் வெளியாக உள்ள கேயூவி100 போன்ற மாடலின் இஞ்ஜினை, பெட்ரோல் மூலம் இயங்கும் வகையில் வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் இஞ்ஜின் தேர்வுகள்;

பெட்ரோல், டீசல் இஞ்ஜின் தேர்வுகள்;

சர்வதேச சந்தைகளை பொருத்த வரை, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், தங்களின் வாகனங்களை பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்ஜின் தேர்வுகளுடன் வழங்குகின்றனர்.

சர்வதேச சந்தைகளுக்கு வழங்கபடும், பெட்ரோல் இஞ்ஜினுடன் கூடிய சர்வதேச ஸ்கார்பியோவுக்கு, சந்தை வாகனங்கள் இருந்தால் அவை டெல்லி பகுதிகளிலும் விற்கபடும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

தேவைகள் எழுந்தால், இதே இஞ்ஜின் எக்ஸ்யூவி500 மாடலில் பொருத்தபட வாய்ப்புகள் உள்ளது.

சர்வதேச சந்தைகளுக்கான ஸ்கார்பியோ இஞ்ஜின்;

சர்வதேச சந்தைகளுக்கான ஸ்கார்பியோ இஞ்ஜின்;

சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யபடும் மஹிந்திரா ஸ்கார்பியோ 2.2 லிட்டர், பெட்ரோல், டர்போ இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 140 பிஹெச்பி-யையும், 280 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

பொறுமை காக்கும் மஹிந்திரா;

பொறுமை காக்கும் மஹிந்திரா;

பெட்ரோல் இஞ்ஜினுடன் கூடிய தயார் நிலையில் உள்ளது.

எனினும், பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு மஹிந்திரா நிறுவனம் அவசரபட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்கும் நிலையில் இல்லை.

டீசல் இஞ்ஜின்களுக்கு விதிக்கபட்டுள்ள தடை தொடர்பாக, 31 மார்ச் 2016 தான் இறுதி முடிவு எடுக்கபட உள்ளது. மஹிந்திரா நிறுவனம் அதுவரை காத்திருக்க முடிவு செய்துள்ளது.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Mahindra Scorpio and Mahindra XUV5OO with Petrol Engines are expected to be introduced for Delhi Market. Delhi Government is implementing ban on the sale of diesel vehicles from January 1, 2016. This ban on the sale of diesel vehicles is implied on vehicles with Diesel engines, which are larger than 2,000cc.
Story first published: Monday, December 21, 2015, 18:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X