வரும் 22ல் விற்பனைக்கு வருகிறது மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட்!
வரும் 22ந் தேதி மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் புதுப்பொலிவுடன் கூடிய புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஆஃப்ரோடு பிரியர்களின் பெஸ்ட் சாய்ஸ் என்ற பெருமையை மஹிந்திரா தார் எஸ்யூவி தக்க வைத்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கும், புதிய வாடிக்கையாளர்களை கவர்வதற்கு ஏற்றவாறு மஹிந்திரா தார் எஸ்யூவியை கூடுதல் சிறப்பம்சங்களை சேர்க்கப்பட்டிருக்கிறது.

தார் எஸ்யூவியின் பம்பர் டிசைன் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. பக்கவாட்டில் பெரிய அளவிலான சைடு ஸ்டெப், புதிய கூரை அமைப்பு உள்பட புதிய மாற்றங்களை கண்டுள்ளது. இரட்டை வண்ண இன்டிரியர் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஏசி வென்ட்டுகளை சுற்றி க்ரோம் பூச்சு செய்யப்பட்டிருக்கிறது. பொலிரோவின் ஸ்டீயரிங் வீல், ஹேண்ட்பிரேக் லிவர் போன்றவை புதிய தார் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இருக்கைகள் சற்று அகலமானமாகியிருக்கிறது. எஞ்சினில் எந்த மாற்றங்களுடன் இருக்காது. ஒரு மாடலில் 105 எச்பி பவரையும், 247 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.5 லிட்டர் சிஆர்டிஇ டீசல் எஞ்சின் கொண்ட 4 வீல் டிரைவ் மாடலில் கிடைக்கும்.
மற்றொரு மாடலில் அதிகபட்சமாக, 63 எச்பி பவரையும், 182 என்எம் டார்க்கை வழங்கும் மாடல் 2 வீல் டிரைவ் மற்றும் 4 டிரைவ் ஆப்ஷனிலும் கிடைக்கும். இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. விலையில் அதிக மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








