புதிய மஹிந்திரா டியூவி300க்கு அமோக வரவேற்பு... இதுவரை 16,000 பேர் முன்பதிவு

Written By:

மஹிந்திரா நிறுவனத்தின், டியூவி3oo அறிமுகமானதில் இருந்து, தற்போது வரை 16,000 புக்கிங்களை பெற்றுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ, பொலேரோ உள்ளிட்ட பல்வேறு கார்கள் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது. அந்த வகையில், சமீபத்தில் வெளியிடபட்ட டியூவி3oo காரும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது.

கிடைக்கும் வகைகள்;

கிடைக்கும் வகைகள்;

மஹிந்திரா டியூவி3oo, மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் உள்ளிட்ட இரண்டு தேர்வுகளிலும் கிடைக்கின்றது.

மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட இரண்டு மாடல்களுக்கும், இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

அமோக வரவேற்பு;

அமோக வரவேற்பு;

மஹிந்திரா டியூவி3oo கார், மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றிருப்பதினால் தான், அறிமுகமான நாள் முதல் தற்போது வரை, அதற்கு சுமார் 16,000 புக்கிங்கள் கிடைத்துள்ளது.

டெலிவரி;

டெலிவரி;

தற்போது வரை, 12,700 மஹிந்திரா டியூவி3oo கார்கள் டெலிவரி செய்யபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூட்டபட்ட உற்பத்தி;

கூட்டபட்ட உற்பத்தி;

அதிகரித்து வரும் புக்கிங்களை சமாளிக்கவும், வாடிக்கையாளர்களுக்கு கார்களை விரைந்து டெலிவரை செய்யவும், மஹிந்திரா டியூவி3oo கார்களின் உற்பத்தி கூட்டபட்டுள்ளது.

பண்டிகைகால விற்பனை;

பண்டிகைகால விற்பனை;

மஹிந்திரா டியூவி3oo கார்கள், சமீபமாக கடந்து சென்ற பண்டிகைகாலங்களில் நல்ல அளவில் விற்பனையானது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மஹிந்திரா டியூவி3oo, 1.5 லிட்டர், 2 ஸ்டேஜ் (2 நிலைகள்) டர்போசார்ஜர்கள் கொண்ட எம்ஹாக்80 டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 84 பிஹெச்பி-யையும் (ஏஎம்டி-யில் 81 பிஹெச்பி-யையும்), உச்சபட்சமாக 230 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

மஹிந்திரா டியூவி3oo, ஒரு லிட்டருக்கு 18.49 என்ற அளவிலான மைலேஜ் வழங்குகின்றது.

2 புதிய மாடல்கள் அறிமுகம்?

2 புதிய மாடல்கள் அறிமுகம்?

மஹிந்திரா நிறுவனம், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், 2 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.

மஹிந்திரா டியூவி3oo காரின், எக்ஸ்டெண்டட் வீல்பேஸ் வெர்ஷன் எனப்படும், கூடுதல் வீல்பேஸ் கொண்ட டியூவி3oo அறிமுகம் செய்யபடலாம் என கருதப்படுகிறது.

7 ஸீட்டர் கார்

7 ஸீட்டர் கார்

முதல் மாடலான இந்த எக்ஸ்டெண்டட் வீல்பேஸ் வெர்ஷன் டியூவி3oo, ஓர் உண்மையான 7 சீட்டர் காராக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது, இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள ஸைலோ காருக்கு மாற்றாக விளங்கும் என தெரிகிறது.

இரண்டாவது புதிய மாடல்;

இரண்டாவது புதிய மாடல்;

இரண்டாவது புதிய மாடல், காம்பேக்ட் எஸ்யூவியாக இருக்கும் வாய்ப்புகளே அதிகமாக உள்ளது. சமீபத்தில் நடத்தபட்ட ஒரு விளம்பர படபிடிப்பில், ஒரு புதிய காம்பேக்ட் எஸ்யூவி உபயோகிக்கபட்டது.

எஸ்101;

எஸ்101;

இரண்டாவது புதிய மாடலாக, வெளியாக உள்ள காம்பேக்ட் எஸ்யூவி-க்கு மஹிந்திரா நிறுவனம், வெரும் எஸ்101 என்ற குறியீட்டு எண்ணை மட்டுமே வழங்கியுள்ளது.

மஹிந்திராவின் இந்த எஸ்101, புதிய பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் புதிய டீசல் இஞ்ஜினுடன் வெளியாக உள்ளது.

Story first published: Friday, December 4, 2015, 11:16 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark