மஹிந்திரா வெரிட்டோ எலக்ட்ரிக் கார் பிப்ரவரியில் அறிமுகமாகிறது
பேட்டரியில் இயங்கும் மஹிந்திரா வெரிட்டோ எலக்ட்ரிக் கார் வரும் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யபட உள்ளது.
இந்திய வாகன சந்தையானது, வேகமாக வளர்ந்து வருவதால் ஏராளமான நிறுவனங்கள் பல்வேறு வகையிலான வாகனங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றனர்.
மஹிந்திரா நிறுவனம், விரைவில் அறிமுகம் செய்ய உள்ள, மஹிந்திரா வெரிட்டோ ஈவி குறித்த செய்திகளை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

அதிகரிக்கும் எலக்ட்ரிக் வாகனங்களின் உபயோகம்;
மஹிந்திரா நிறுவனம், தங்களின் எலக்ட்ரிக் வாகன சந்தையை விஸ்தரிக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
சமீபத்தில், டெல்லியில் டீசல் வாகனங்களுக்கான தடை அமலாகும் நாள் நெருங்கி கொண்டே இருப்பதால், ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களும், பசுமையான வருங்காலத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எலக்ட்ரிக் வாகனங்களும், ஹைப்ரிட் வாகனங்களும் தான் பசுமையான வருங்காலத்திற்கான, நெடுங்கால தீர்வாக அமைய உள்ளது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வெரிட்டோ எப்போது அறிமுகம்;
மஹிந்திராவால் தயாரிக்கபடும் வெரிட்டோ ஈவி, பிப்ரவரி 2016-ல் அறிமுகம் செய்யபடும் என தெரிகிறது.
மேலும், பல்வேறு எலக்ட்ரிக் மாடல்களை வரும் ஆண்டில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக எதிர்பார்க்கபடுகிறது.
தி மேக்ஸிமோ ஈவி, இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

தாஜ்மஹால் அருகே உபயோகம்;
வெரிட்டோ மற்றும் மேக்ஸிமோ ஈவி-க்கள் 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிபடுத்தபட்டது.
இதன் இறுதி வடிவம் கொண்ட வாகனத்தை, நிகழ இருக்கும் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
தற்போதைய நிலையில், மஹிந்திரா மேக்ஸிமோ ஈவி, தாஜ்மஹாலை சுற்றியும், அருகே உள்ள பகுதிகளில் பயணியர்களின்போக்குவரத்திற்கு பயனபடுத்தபடுகிறது.

உபயோகிக்கபடும் மோட்டார்கள்;
வெரிட்டோ மற்றும் மேக்ஸிமோ ஈவி-க்களிலும், மஹிந்திரா ஈ2ஓ வாகனத்தில் பயன்படுத்தபடும், ஒரே வகையான எலக்ட்ரிக் மோட்டார்களே பயன்படுத்தபடுகிறது.
வெரிட்டோ மற்றும் மேக்ஸிமோ ஈவி-க்களில் அதிக சுமை ஏற்றுக்கொள்ளும் வகையில், இந்த எலக்ட்ரிக் மோட்டார்கள் சற்று மாற்றி வடிவமைக்கபட உள்ளது.
மஹிந்திரா மற்றும் ரேவா நிறுவனங்கள் இணைந்து தயாரித்த லித்தியம்-இயான் பேட்டரி பேக்குகளில் தான், இந்த கார்களுக்கு தேவையான சக்தி தேக்கி வைத்து கொள்ளபடுகிறது.

டேக்ஸி சர்வீஸ்களுக்கு பரிந்துரை;
மஹிந்திரா நிறுவனம், அதன் வெரிட்டோ எலக்ட்ரிக் வாகனங்களை டேக்ஸி வேவைகளுக்கு அதிகமாக பரிந்துரைக்க திட்டமிட்டுள்ளது.
தற்போது, ஏராளமான டேக்ஸிக்கள், டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் டேக்ஸிக்களை இயக்கி வருகின்றன. இத்தகைய கேப் சர்வீஸ்களுக்கு, இந்த வகை எலக்ட்ரிக் வாகனங்களை உபயோகிப்பதன் மூலம் மாசு வெளியீட்டை பெரும் அளவில் குறைக்க முடியும்.

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்


Click it and Unblock the Notifications








