இந்த மாதம் அறிமுகமாகிறது மஹிந்திரா எக்ஸ்யூவி 500 ஃபேஸ்லிஃப்ட் மாடல்!
புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி மாடல் இந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது உறுதியாகியுள்ளது. சற்றுமுன் மஹிந்திரா வட்டாரத்திலிருந்து இதற்கான தகவல் கிடைத்தது.
புதிய க்ரோம் க்ரில், புதிய பம்பர் டிசைன் போன்றவை முன்புறத்தில் குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கும். புதிய ஹெட்லைட் டிசைனுடன் வருகிறது. புதிய மாடலில் 10 ஸ்போக் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

இன்டிரியரில் அதிக மாற்றங்கள் இருக்காது. தற்போதைய மாடலில் இருக்கும் அதே 2.2 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் எஞ்சின் இருக்கும். இந்த எஞ்சின் 140 பிஎச்பி பவரையும், 330 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மாடல் இந்த மாத இறுதியில் வருகிறது. வரும் 26ந் தேதி பெங்களூரில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக எமக்கு கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications








