விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய மஹிந்திரா எக்ஸ்யூவி 500!

By Saravana

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி கார்.

கடந்த 2011ல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 500 பெரும் வரவேற்பை பெற்றது. அசத்தலான டிசைன் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்த்தது.

Mahindra XUV 500

இதனால், முன்பதிவும் கிடுகிடுவென அதிகரித்தது. ஆரம்பத்தில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து டெலிவிரி கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், தற்போது விற்பனையில் 1.50 லட்சம் என்ற புதிய சாதனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

டிசைன் மட்டுமின்றி, தொழில்நுட்ப வசதிகள், சக்திவாய்ந்த எஞ்சின் ஆகியவையும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500வில் 2,179சிசி எம்ஹாக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 140 பிஎஸ் பவரையும், 330 என்எம் டார்க்கையும் வழங்கும்.

ரூ.11.21 லட்சம் முதல் ரூ.16.05 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குளோபல் எஸ்யூவி மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 500 சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களை கவர்ந்த மாடலாக வலம் வருகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 3, 2015, 11:02 [IST]
English summary
Mahindra XUV500 has achieved selling 1,50,000 units since its launch in September, 2011. The SUV is Mahindra's most features rich offering to its customers in India as well as International markets.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+