ஏர்பேக் சாஃப்ட்வேர் பிரச்னை: மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு ரீகால்!
ஏர்பேக் சாஃப்ட்வேரில் இருக்கும் தொழில்நுட்ப பிரச்னையை சரிசெய்து தருவதற்காக, மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவிக்கு ரீகால் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு முன்பு தயாரிக்கப்பட்ட எக்ஸ்யூவி 500 எஸ்யூவிகளில் சைடு கர்ட்டெயின் ஏர்பேக் சாஃப்ட்வேரில் பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஏர்பேக் சாஃப்ட்வேரை மேம்படுத்த தர மஹிந்திரா முடிவு செய்திருக்கிறது.

இதற்காக, பிரச்னை இருப்பதாக கருதப்படும் எக்ஸ்யூவி 500 எஸ்யூவிகளை திரும்ப அழைக்க இருப்பதாக மஹிந்திரா தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதாகவும் மஹிந்திரா கூறியிருக்கிறது.
உங்களது எக்ஸ்யூவி 500 எஸ்யூவி இந்த ரீகால் அறிவிப்பில் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்வதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








