சன்ரூஃப் கொண்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 500... ஸ்பெஷல் எடிசன் - விபரம்

சன்ரூஃப் உள்ளிட்ட கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எக்ஸ்ளூசிவ் எடிசன் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய எக்ஸ்யூவி 500 வாடிக்கையாளர்களுக்கு அவசியமாக தேவைப்படும் 10 கூடுதல் வசதிகளை அளிக்கிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி 500வின் W8 டாப் வேரியண்ட்டில் இருவித மாடல்களில் கிடைக்கும்.


வண்ணம்

வண்ணம்

வெள்ளை வண்ணத்தில் மட்டுமே இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் எக்ஸ்யூவி 500 கிடைக்கும். இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலின் டாப் வேரியண்ட்டில் 6 வே அட்ஜெஸ்ட் கொண்ட டிரைவர் இருக்கை, ஹைட்ராலிக் அசிஸ்ட் பானட் போன்றவை கூடுதல் வசதிகளாக இருக்கும். மற்ற கூடுதல் வசதிகள் புதிய ஸ்பெஷல் எடிசனின் இரு மாடல்களிலும் பொதுவாக இருக்கும். அவற்றை தொடர்ந்து காணலாம்.

சன்ரூஃப்

சன்ரூஃப்

ஆன்ட்டி பிஞ்ச் எனப்படும் பொருட்களை கண்டுணர்ந்து செயல்படும் சன்ரூஃப் கொடுக்கப்ட்டுள்ளது. கைகள் அல்லது விரல்கள் பட்டால் கண்ணாடி மூடாமல் விலகிவிடும்.

அட்ஜெஸ்ட் இருக்கை

அட்ஜெஸ்ட் இருக்கை

6 வே பவர் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ஓட்டுனர் இருக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இது ஓட்டுனர் வசதியாக அமர்ந்து செல்ல உதவிபுரியும்.

இன்டர்நெட் வசதி

இன்டர்நெட் வசதி

இன்டர்நெட் வசதியை அளிக்கும் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ரிவர்ஸ் கேமரா நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன.

 பிரத்யேக அலாய் வீல்கள்

பிரத்யேக அலாய் வீல்கள்

பிரத்யேக வண்ணத்திலான அலாய் வீல்களும் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

அலுமினியம் பெடல்கள்

அலுமினியம் பெடல்கள்

பார்ப்பதற்கு ஸ்போர்ட்டியாக இருக்கும் விதத்திலான அலுமினியம் பெடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்கஃப் பிளேட்

ஸ்கஃப் பிளேட்

எக்ஸ்யூவி 500 பேட்ஜுடன் ஒளி பின்னணியை வழங்கும் ஸ்கஃப் பிளேட் கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்ஜ்

பேட்ஜ்

சிறப்பு பதிப்பு என்பதற்காக பின்புறத்தில் எக்ஸ்க்ளூசிவ் எடிசன் பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் வசதிகள்

கூடுதல் வசதிகள்

வாய்ஸ் மெசெஜ் சிஸ்டம், ஆன்ட்டி பிஞ்ச் வசதி கொண்ட ஓட்டுனர் பக்க பவர் விண்டோஜ் போன்றவையும் கூடுதல் வசதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த எக்ஸ்க்ளூசிவ் எடிசன் மாடலில் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 138 பிஎச்பி பவரையும், 330 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும்.

விலை விபரம்

விலை விபரம்

பவர் அசிஸ்ட் டிரைவர் சீட் கொண்ட மாடல் ரூ.14.65 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், பவர் அசிஸ்ட் டிரைவர் சீட் வசதி இல்லாத எக்ஸ்க்ளூசிவ் எடிசன் மாடல் ரூ.14.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் டெல்லி விலையிலும் கிடைக்கும். இது லிமிடேட் எடிசன் மாடல். மொத்தம் 700 கார்கல் மட்டுமே இந்த ஸ்பெஷல் எடிசனில் விற்பனை செய்யப்படும்.

More from DriveSpark

Article Published On: Monday, February 23, 2015, 14:22 [IST]
English summary
Country's largets utility passengger vehicle maker Mahindra has introduced new XUV500 W8 Xclusive Edition in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+