மஹிந்திராவின் புதிய மினி எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது!

Written By:

ரூ.4.50 லட்சம் விலையில், புதிய மினி எஸ்யூவி மாடலை மஹிந்திரா நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

தற்போது எஸ்101 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய மினி எஸ்யூவி மாடலை நாளை மறுதினம் மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறது. இந்த நிலையில், இந்த புதிய மினி எஸ்யூவியின் பெயர் விபரத்தை ஆட்டோகார் இந்தியா தளம் வெளியிட்டிருக்கிறது.

நாமகரணம்

நாமகரணம்

மஹிந்திராவின் புதிய மினி எஸ்யூவி மாடல் எக்ஸ்யூவி100 என்ற பெயரில் வர இருப்பதாக முன்னர் தகவல்கள் தெரிவித்தன. இந்தநிலையில், இந்த புதிய மினி எஸ்யூவியை கேயூவி100 என்ற பெயரில் விற்பனைக்கு மஹிந்திரா வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

6 சீட்டர்

6 சீட்டர்

4 மீட்டருக்குள் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த எஸ்யூவியில் 3+3 என்ற இருக்கை அமைப்பு கொண்டிருக்கும். எனவே, 6 பேர் வரை பயணிக்க முடியும்.

எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

இந்த புதிய மினி எஸ்யூவியிலல் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசதிகள்

வசதிகள்

டச்ஸ்கிரீன் ஆடியோ சிஸ்டம், பவர் விண்டோஸ், டியூவல் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். மேலும், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், 15 இன்ச் வீல்கள் போன்றவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

Picture Credit: Motoroctane

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.4.50 லட்சம் முதல் ரூ.6.50 லட்சம் வரையிலான விலைப் பட்டியலில் வர இருக்கிறது. பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும்.

 
English summary
Mahindra's New Mini SUV Might Be Called KUV100.
Story first published: Wednesday, December 16, 2015, 10:24 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark