மாருதி பலேனோ காரின் வேரியண்ட் மற்றும் வசதிகள் விபரம்!

By Saravana

வரும் 26ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் புதிய மாருதி பலேனோ காருக்கு மாருதி நெக்ஸா ஷோரூம்களில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. ரூ.25,000 வரை முன்பணம் பெற்றுக் கொண்டு முன்பதிவு செய்யப்படுகிறது.

இந்தநிலையில், இந்த காரின் வேரியண்ட்டுகள் மற்றும் அதில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மாருதி நெக்ஸா பிரிமியம் ஷோரூம்கள் வழியாக விற்பனைக்கு வரும் இரண்டாவது மாடலான மாருதி பலேனோ காரின் வசதிகள் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் என நம்பலாம். வேரியண்ட் மற்றும் வசதிகள் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 வேரியண்ட்டுகள் விபரம்

வேரியண்ட்டுகள் விபரம்

மாருதி பலேனோ கார் சிக்மா, டெல்ட்டா, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா என நான்கு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த வேரியண்ட்டுகளில் இடம்பெற்றிருக்கும் வசதிகளை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

சிக்மா வேரியண்ட்

சிக்மா வேரியண்ட்

ஓட்டுனர் மற்றும் முன்புற பயணிக்கான ஏர்பேக்குகள், அனைத்து சக்கரங்களுக்கும் சரியான விகிதத்தில் பிரேக் பவரை செலுத்தும் இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன்புறத்திற்கு மட்டும் பவர் விண்டோஸ், டில்ட் வசதியுடன் கூடிய பவர் ஸ்டீயரிங், கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர், ரியர் பார்சல் ட்ரே, ஹீட்டருடன் கூடிய ஏசி, சென்ட்ரல் லாக்கிங் வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

 டெல்ட்டா வேரியண்ட்

டெல்ட்டா வேரியண்ட்

க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி வசதி, எலக்ட்ரிக்கல் கன்ட்ரோல் வசதியுடன் சைடு மிரர்கள், ரியர் பார்க்கிங் சென்சார், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், பவர் விண்டோஸ், டீஃபாகர் வசதி, ரியர் வைப்பர், கீ லெஸ் என்ட்ரி, 60: 40 விகிதத்தில் மடங்கும் பின் இருக்கைகள், பெட்ரோல் மாடலில் மேனுவல் தவிர்த்து சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாகவும் வருகிறது.

 மாருதி பலேனோ ஸீட்டா

மாருதி பலேனோ ஸீட்டா

எல்இடி பகல்நேர விளக்குகள், புற ஊதாக் கதிர்களை தடுக்கும் கண்ணாடிகள், இருள் வேளைகளில் தானாக ஒளிரும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், அலாய் வீல்கள், முன்புறத்திற்கான பனி விளக்குகள், புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் கீ லெஸ் என்ட்ரி, ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல் ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்கள்.

 மாருதி பலேனோ ஆல்ஃபா

மாருதி பலேனோ ஆல்ஃபா

மேற்கண்ட அனைத்து வசதிகளுடன் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், ரிவர்ஸ் கேமரா, டச் ஸ்கிரீன் மற்றும் நேவிகேஷன் வசதியை வழங்கும் ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை டாப் வேரியண்ட்டான ஆல்ஃபாவில் இடம்பெற்றிருக்கிறது.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

பெட்ரோல் மாடலில் 83 பிஎச்பி பவரை அதிகபட்சமாக வழங்கக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், டீசல் மாடலில் 88 பிஎச்பி பவரை அதிகபட்சமாக வழங்கக்கூடிய 1.3 லிட்டர் எஞ்சினும் கொண்டதாக கிடைக்கும். பெட்ரோல் மாடல் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாகவும், டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக மட்டும் கிடைக்கும்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

சாலிட் ஃபயர் ரெட், பிரிமியம் அர்பன் புளூ, மெட்டாலிக் பிரிமியம் சில்வர், ரே புளூ, பியர்ல் ஆர்டிக் ஒயிட், கிரானைட் க்ரே ஆகிய ஏழு வண்ணங்களில் வருகிறது.

 வடிவம்

வடிவம்

மாருதி பலேனோ கார் 3,995மிமீ நீளம், 1,500மிமீ உயரமும், 1,745மிமீ அகலமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2,520மிமீ. மேலும், இந்த கார் 180மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொணடிருப்பதால், இந்திய சாலைநிலைகளை சிறப்பாக எதிர்கொள்ளும் எனலாம்.

Source: Team BHP

More from DriveSpark

Article Published On: Monday, October 12, 2015, 10:52 [IST]
English summary
Maruti Baleno's Variants Details Surfaces Online.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+