மாருதி பலேனோ கார் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் இஞ்ஜினுடன் இந்திய சாலைகளில் சோதனை

By Ravichandran

மாருதி பலேனோ காரின் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் இஞ்ஜின் பொருத்தப்பட்ட மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. ஃபோர்டு நிறுவனத்தின் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் போன்றே, சுஸுகியின் இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் அதிக செயல்திறனும், எரிபொருள் சிக்கனமும் கொண்டது.

இந்த நிலையில், முதல்முறையாக சுஸுகியின் புதிய 1.0 லிட்டர் பூஸ்டர் எஞ்சின் மாருதி பலேனோ காரில் பொருத்தப்பட்டு சாலை சோதனைகள் துவங்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு கார்கள் ஆரம்பகட்டத்தில், ஒரு விதமான இஞ்ஜினுடன் வெளியிடபட்டு, பின்னர் அதில் மேம்பாடுகள் செய்யபடுவது வழக்கம். அத்தகைய வகையில், சில மேம்பாடுகள் செய்யபடுவதற்காக, சோதனை செய்யபடுவது குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடகளில் காணலாம்.

1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் இஞ்ஜின் சோதனை;

1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் இஞ்ஜின் சோதனை;

1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் இஞ்ஜின்களுக்கான சோதனைகளை, மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சாலைகளில் மேற்கொண்டு வருகின்றது.

இது பலேனோ ஹேட்ச்பேக் காரின் வைத்து சோதனை செய்யபடுகிறது. தற்போதைய நிலையில், சர்வதேச சந்தைகளுக்கு மட்டுமே இந்த பூஸ்டர்ஜெட் இஞ்ஜின்கள் கொண்ட வாகனங்கள் வழங்கபடுகிறது.

இந்தியாவிலேயே உற்பத்தி;

இந்தியாவிலேயே உற்பத்தி;

மாருதி சுஸுகி நிறுவனத்தால் தயாரிக்கபடும் பலேனோ கார்கள், இந்தியாவிலேயே உற்பத்தி செய்யபடுகிறது.

அறிமுகம் செய்யபடும் போது, இந்த பிரிமியம் ஹேட்ச்பேக்கானது பூஸ்டர்ஜெட் இஞ்ஜினுடன் அறிமுகம் செய்யபடவில்லை. பலேனோ காரை தற்போது பெர்ஃபார்மன்ஸ் வெர்ஷனாக அறிமுகம் செய்யலாம்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யபடும் பூஸ்டர்ஜெட்;

உள்நாட்டில் உற்பத்தி செய்யபடும் பூஸ்டர்ஜெட்;

பூஸ்டர்ஜெட் இஞ்ஜின்கள் இந்தியாவிலேயே தயாரிக்கபட உள்ளது. தற்போது, இந்திய சாலைகளில் பூஸ்டர்ஜெட் இஞ்ஜின்கள் சோதனை செய்யபடுவதற்கு இதுவும் முக்கிய காரணமாக இருக்கலாம்.

இந்தியாவை தங்களின் உற்பத்தி மையமாக ஏற்று கொள்ள உள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெளிவு படுத்தியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கபடும் பூஸ்டர்ஜெட் இஞ்ஜின்கள் சர்வதேச சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யபட உள்ளது.

பூஸ்டர்ஜெட் இஞ்ஜின் பற்றி...

பூஸ்டர்ஜெட் இஞ்ஜின் பற்றி...

மாருதி சுஸுகி நிறுவனத்தால் தயாரிக்கபடும், பூஸ்டர்ஜெட் இஞ்ஜின், டர்போசார்ஜர் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் ஆகும்.

திறன்;

திறன்;

இந்த பூஸ்டர்ஜெட் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

பூஸ்டர்ஜெட் இஞ்ஜின், 108.50 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 170 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் வகையில் இஞ்ஜினியர்கள் இதனை வடிவமைத்துள்ளனர்.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை, மாருதி சுஸுகி பலேனோ ஏராளமான பாதுகாப்பு அம்சங்களை ஸ்டாண்டர்ட் அம்சங்களாக கொண்டுள்ளது.

பூஸ்டர்ஜெட் இஞ்ஜின், மிகவும் உயர்ந்த வேரியண்டில் மட்டுமே வழங்கபடலாம். பூஸ்டர்ஜெட் இஞ்ஜினுடன் வெளியாகும் மாருதி சுஸுகி பலேனோ கார்கள், ஸ்பெஷலான பேட்ஜிங் மற்றும் பிரத்யேகமான வண்ணங்களில் வெளியாகும் என தெரிகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி பலேனோ காரின் எஞ்சின், மைலேஜ், வசதிகள் விபரம்

மாருதி பலேனோ காரின் புதிய படங்கள் மற்றும் கூடுதல் விஷயங்கள்

அக்.26ல் ரிலீஸ்... மாருதியின் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் பற்றியத் தகவல்கள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

More from DriveSpark

Article Published On: Wednesday, December 30, 2015, 10:07 [IST]
English summary
Maruti Suzuki has started testing their 1.0-litre BoosterJet engines on Indian roads recently. This all-new engine is tested under the hood of the Baleno hatchback cars. At present, Suzuki offers these BoosterJet engine for international markets alone. The Baleno could be introduced as a performance version now.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+