மாருதி செலிரியோ டீசல் மாடலின் மைலேஜ் விபரம் கசிந்தது!

By Saravana

பெரிதும் எதிர்பார்க்கப்படும் மாருதி செலிரியோ காரின் டீசல் மாடல் பற்றிய பல முக்கிய விபரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. டீலர்களுக்கான கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட மாருதி செலிரியோ காரின் விபரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளன.

எஞ்சின் திறன், மைலேஜ் உள்ளிட்ட பல முக்கிய விபரங்கள் கசிந்துள்ளன. அந்த விபரக்குறிப்புகள் மூலம் கிடைத்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அறிமுக தேதி

அறிமுக தேதி

விபரக்குறிப்புகள் கசிந்த அதேவேளையில், மாருதி செலிரியோ காரின் டீசல் மாடல் வரும் 3ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் மாருதி செலிரியோ டீசல் மாடல் குறித்த தகவல்களை காணலாம்.

டீசல் எஞ்சின் விபரம்

டீசல் எஞ்சின் விபரம்

மாருதி நிறுவனத்தின் புத்தம் புதிய 800சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த எஞ்சின் 2 சிலிண்டர்கள் கொண்டது. அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 125 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

பிக்கப் அதிகமிருக்கும்

பிக்கப் அதிகமிருக்கும்

இது இரண்டு சிலிண்டர் கொண்ட எஞ்சினாக இருந்தாலும், அதிக பிக்கப்பை வழங்கும். அதாவது, ஸ்விஃப்ட் கார் ஒரு சிசி.,க்கு 0.15 என்எம் டார்க்கை வழங்கும் நிலையில், செலிரியோ டீசல் எஞ்சின் ஒரு சிசி.,க்கு 0.16 என்எம் டார்க்கை வழங்கும் என்பதால், உடனடி பிக்கப் கொண்ட மாடலாக இருக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

மாருதி செலிரியோ டீசல் மாடல் லிட்டருக்கு 27.62 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளதாம். எனவே, இந்தியாவிலேயே அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமை மாருதி செலிரியோவுக்கு கிடைக்க இருக்கிறது.

இலகு எடை எஞ்சின்

இலகு எடை எஞ்சின்

மாருதி செலிரியோ காரில் பொருத்தப்பட இருக்கும் எஞ்சின் முழுதும் அலுமினிய பாகங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது வெறும் 89 கிலோ எடை கொண்டது.

 வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

எல்டிஐ, விடிஐ, இசட்டிஐ மற்றும் இசட்டிஐ ஆப்ஷனல் என நான்கு வேரியண்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

பெட்ரோல் மாடலைவிட ரூ.75,000 வரை கூடுதல் விலையில் மாருதி செலிரியோ காரின் டீசல் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 30, 2015, 13:59 [IST]
English summary
Maruti Celerio diesel Model Details Leaked.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+