அடுத்த ஆண்டு துவக்கத்தில் மாருதியின் புதிய மினி எஸ்யூவி ரிலீஸ்!!

By Saravana

அடுத்த ஆண்டு துவக்கத்தில் மாருதியின் புதிய மினி எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ளது உறுதியாகியுள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு நேர் எதிராக மிக சவாலான விலையில், இந்த புதிய எஸ்யூவி மாடல் நிலைநிறுத்தப்படும் என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை கிளப்பியிருக்கிறது.

டிசைன்

டிசைன்

கடந்த 2012ம் ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் எக்ஸ்ஏ ஆல்ஃபா என்ற எஸ்யூவி கான்செப்ட்டை மாருதி நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. இந்த கான்செப்ட் மாடலின் டிசைன் தாத்பரியங்களும், சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மினி விட்டாரா ப்ரீஸ் எஸ்யூவியின் டிசைன் தாத்பரியங்களையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மினி எஸ்யூவி

மினி எஸ்யூவி

இந்த புதிய மினி எஸ்யூவி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்றே 4 மீட்டர் நீளத்துக்கும் குறைவான மாடலாக இருக்கும். அதாவது, 3.9 மீட்டர் நீளமும், 1.9 மீட்டர் அகலமும், 1.6 மீட்டர் உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். மேலும், 2.5 மீட்டர் வீல் பேஸ் கொண்டதாக இருக்கும் என்பதால் உட்புறத்தில் தாராள இடவசதியை வழங்கும் என கருதப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

பெரும்பாலான மாருதி கார்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது.

பூஸ்டர்ஜெட் எஞ்சின்

பூஸ்டர்ஜெட் எஞ்சின்

மாருதியின் புதிய மினி எஸ்யூவியில் சுஸுகியின் புதிய 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் எஞ்சின் கூட பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. அதாவது, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் ஆப்ஷனுக்கு எதிராக இந்த மாடலை கொண்டு வரவும் மாருதியிடம் திட்டம் உள்ளது.

 டீசல் வேரியண்ட்டுகள்

டீசல் வேரியண்ட்டுகள்

டீசல் மாடலில் பேஸ் எல்டிஐ என்ற பேஸ் வேரியண்ட்டை தவிர்த்துவிட்டு, விடிஐ, இசட்டிஐ மற்றும் இசட்டிஐ+ ஆகிய மூன்று வேரியண்ட்களில் வருவதாக தகவல்கள் கூறுகின்றன.. எனவே, டீசல் மாடல் குறைந்த விலை கொண்டதாக இருக்காது.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி சர்வதேச வாகன கண்காட்சி துவங்குவதற்கு சிறிது முன்னரோ அல்லது கண்காட்சியிலோ இந்த புதிய மினி எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடலை நேரடியாக அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 11, 2015, 9:32 [IST]
English summary
Maruti compact SUV likely to launch early next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+