க்ரெட்டாவை ஒடுக்க எஸ் க்ராஸுக்கு திராணி இல்லை... புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் மாருதி!!

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்க இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், மாருதியின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன் வந்த மாருதி எஸ் க்ராஸ் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. எனவே, ஹூண்டாய் க்ரெட்டா மார்க்கெட்டை உடைப்பதற்காக, புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்க மாருதி முடிவு செய்துவிட்டது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அது எந்த மாடல்?

அது எந்த மாடல்?

மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகியின் ஐவி-4 கான்செப்ட் அடிப்படையிலான விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மாடல்தான் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

 நெக்ஸா ஷோரூம்

நெக்ஸா ஷோரூம்

மாருதி எஸ் க்ராஸ் மற்றும் பலேனோ கார்களை தொடர்ந்து, இந்த புதிய எஸ்யூவி மாடலும் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாகவே விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தற்போது கிடைத்திருக்கும் தகவல்கள் கூறுகின்றன.

எஞ்சின்

எஞ்சின்

இரண்டு டீசல் மற்றும் ஒரு பெட்ரோல் மாடலில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. மாருதி எஸ் க்ராஸ் மாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 1.3 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின்கள் மற்றும் மாருதி எர்டிகா எம்பிவி காரில் இருக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்களுடன் வருகிறது.

ஆட்டோமேட்டிக் மாடல்

ஆட்டோமேட்டிக் மாடல்

மாருதி பலேனோ கார் போன்றே, புதிய மாருதி விட்டாரா காம்பேக்ட் எஸ்யூவியில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, சிவிடி கியர்பாக்ஸ் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி, அடுத்த ஆண்டு ஏப்ரலில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

மாருதி எஸ் க்ராஸ் இரண்டு டீசல் மாடல்களில் மட்டுமே கிடைக்கிறது. அதேநேரத்தில், புதிய மாருதி விட்டாரா காம்பேக்ட் எஸ்யூவி பெட்ரோல் மாடலிலும் வருவதால், காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிக சவாலான விலையில் களமிறக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.

நெருக்கடி

நெருக்கடி

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு கிடைத்திருக்கும் வரவேற்பும், எஸ் க்ராஸ் மாடல் தந்த ஏமாற்றமும் மாருதிக்கு நெருக்கடி தந்துள்ளது. எனவே, புதிய மாடலை அறிமுகப்படுத்தி, ஹூண்டாய் க்ரெட்டா மார்க்கெட்டை ஓரளவு உடைக்க முடிவு செய்திருக்கிறது மாருதி.

Most Read Articles
English summary
Suzuki has developed the new Vitara compact SUV based on the iV-4 concept. Maruti Suzuki is expected to debut this model at the 2016 Auto Expo and will be launched across the country in April 2016.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X