இந்த மாதம் விற்பனைக்கு வருகிறது மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட்!

இந்த மாத இறுதியில் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மாருதி டிசையர் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு 4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் வடிவமைக்கப்பட்ட புதிய மாருதி டிசையர் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த புதிய மாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. விற்பனையிலும் தொடர்ந்து வலுவான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

இந்த நிலையில், ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் எக்ஸெண்ட் மற்றும் டாடா ஸெஸ்ட் கார்களால் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியை சமாளிக்கும் விதத்தில் தோற்றத்தில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் புதிய டிசையர் கார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.


டிசைன் மாற்றங்கள்

டிசைன் மாற்றங்கள்

வெளிப்புறத்தை பொறுத்தவரையில், அனேக மாற்றங்கள் முன்பக்கத்திலேயே நடந்துள்ளன. குரோம் பட்டையுடன் கூடிய க்ரில் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மோக்டு ஹெட்லைட் புதிய அம்சமாக இருக்கும். மேலும், புதிய அப்ஹோல்ஸ்டரி கொண்டதாக வர இருக்கிறது.

கூடுதல் வசதிகள்

கூடுதல் வசதிகள்

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் கார் போன்றே இந்த புதிய டிசையர் காரில் புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோ ஃபோல்டிங் ரியர் வியூ கண்ணாடிகள் போன்றவை இருக்கும்.

கூடுதல் மைலேஜ்

கூடுதல் மைலேஜ்

தற்போது விற்பனையில் இருக்கும் டிசையர் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19.1 கிமீ மைலைஜேயும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 17.4 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 23.4 கிமீ மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால், புதிய மாடலின் மைலேஜ் இன்னும் கூடுதலாக இருக்கும் விதத்தில் எஞ்சின்கள் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, டீசல் மாடல் லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தருவதாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்களில் எவ்வித மாற்றங்களும் இருக்காது. தற்போது விற்பனையில் இருக்கும் அதே 85பிஎச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 74 பிஎச்பி பவரை அளிக்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

 விலை

விலை

தற்போதேயை மாடலைவிட சற்று கூடுதல் விலையில் புதிய டிசையர் விற்பனைக்கு வருகிறது. பிப்ரவரி 23ந் தேதி புதிய டிசையர் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் முதல் வாரத்தில் டெலிவிரி துவங்கப்பட உள்ளதாக பெங்களூர் டீலர் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

 டிசையர் ஆன்ரோடு விலை

டிசையர் ஆன்ரோடு விலை

மாருதி டிசையர் காரின் சென்னை ஆன்ரோடு விலை

More from DriveSpark

Article Published On: Monday, February 9, 2015, 10:22 [IST]
English summary
For 2015 Maruti Suzuki will provide cosmetic upgrades to its Swift Dzire. These will be similar to that provided to its hatchback version. The Japanese manufacturer is expected to launch this new version of the compact sedan within February, 2015 itself.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+