மத்தளத்திற்கு ரெண்டு பக்கம் இடி... ஆனால், மாருதிக்கு இப்போது நாலா பக்கமும்...!!

By Saravana

இந்தியாவின் நம்பர்- 1 கார் நிறுவனமாகவும், விற்பனையில் பாதி மார்க்கெட் பங்களிப்புடன் ஜாம்பவனாக பீடு நடை போடும் மாருதிக்கு போட்டியாளர்களின் அதிரடி வரவுகளால் கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. விற்பனையின் டாப் 10 பட்டியலில் இருக்கும் மாருதி கார்களுக்கு போட்டியாளர்களின் புதிய மாடல்களின் வரவால் சவாலான நிலையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ஆம், மாருதி கார்களை மையப்படுத்தி ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கும் புதிய மாடல்கள் அந்த நிறுவனத்தின் விற்பனையில் தொய்வை ஏற்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அவ்வாறு, மாருதி கார்களுக்கு நெருக்கடி தரும் விதத்தில், களமிறங்கிய மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

மாருதி டிசையர்

மாருதி டிசையர்

கடந்த ஜூலையில் விற்பனையில் இந்தியாவின் நம்பர்- 1 மாடல் என்ற பெருமையை பெற்றது. அத்துடன், 23,086 கார்கள் என்ற புதிய உச்சத்தை விற்பனையில் தொட்டு சாதித்தது. ஆனால், கடந்த ஜூலையில் வந்த ஃபோர்டு ஆஸ்பயர் காம்பேக்ட் செடான் கார் மாருதி டிசையர் காருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் விற்பனையில் ஃபோர்டு டிசையர் 5,176 என்ற சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில், டிசையர் காரும் 18,718 என்ற சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்திருந்தாலும், காம்பேக்ட் செடான் செக்மென்ட்டில் டிசையருக்கு மேலும் ஒரு போட்டியாளராக நுழைந்த ஃபோர்டு ஆஸ்பயர் கொஞ்சம் விற்பனையை பங்கிட்டுக் கொண்டது தெரிய வருகிறது.

ஃபோர்டு ஆஸ்பயர்

ஃபோர்டு ஆஸ்பயர்

மாருதி டிசையரை விட சிறப்பான தொழில்நுட்ப வசதிகள், டிசைன், எஞ்சின் ஆப்ஷன் என ஃபோர்டு ஆஸ்பயர் நெருக்கடியை தந்து கொண்டிருக்கிறது. வரும் மாதங்களில் போட்டியை சமாளித்து இந்த விற்பனையை தொடர்ந்து மாருதி டிசையர் தக்க வைக்குமா என்பதை பார்த்தாலும், நெருக்கடி ஏற்பட்டிருப்பது உண்மை என்பதே விற்பனை பட்டியல் மூலமாக தெரிய வருகிறது. அத்தோடு, ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் எக்ஸென்ட், டாடா ஸெஸ்ட் போன்ற போட்டியாளர்களுடன் சேர்ந்து, தற்போது புதிய ஃபோர்டு ஆஸ்பயரும் குறிப்பிடத்தக்க விற்பனையை பங்கிட்டுக் கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

02. மாருதி ஆல்ட்டோ 800

02. மாருதி ஆல்ட்டோ 800

விற்பனையில் இந்தியாவின் நம்பர் 1 கார் மாடலாக மாருதி ஆல்ட்டோ 800 கார் விளங்குகிறது. ஆனால், சமீபத்தில் வந்த ரெனோ க்விட் கார் மாருதி ஆல்ட்டோ 800 காரை அனைத்து விதத்திலும் குறி வைத்தே இறக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, மாருதி ஆல்ட்டோ 800 காரைவிட குறைவான விலை, சிறப்பான டிசைன், இடவசதி , தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருப்பதால், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ரெனோ க்விட்

ரெனோ க்விட்

குறைவான விலை, வசதிகளில் மட்டுமல்ல, மாருதி ஆல்ட்டோ 800 காரைவிட 15 சதவீதம் குறைவான பராமரிப்பு செலவீனம் கொண்டதாக க்விட் இருக்கும் ரெனோ தெரிவித்துள்ளதும் வாடிக்கையாளர்கள் தங்களது கவனத்தை திசை திருப்பும் வாய்ப்புள்ளது. எனவே, அடுத்தடுத்த மாதங்களில் மாருதி ஆல்ட்டோ 800 காரின் விற்பனையில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட்

எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத கார் மாடலாக மாருதி ஸ்விஃப்ட் வலம் வருகிறது. டிசைன், மைலேஜ், குறைவான பராமரிப்பு, மாருதியின் சிறப்பான வாடிக்கையாளர் சேவை என அனைத்தும் இந்த காரின் விற்பனையை சிறப்பான இடத்தில் வைத்திருக்கிறது. அதேநேரத்தில், சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய தலைமுறை ஃபோர்டு ஃபிகோ கார் மாருதி ஸ்விஃப்ட் காருக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஃபோர்டு ஃபிகோ

புதிய ஃபோர்டு ஃபிகோ

டிசைன், தொழில்நுட்ப வசதிகள், சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்கள், நிறைவான மைலேஜ் என்பதோடு, மாருதி ஸ்விஃப்ட் காரை குறைவான விலையில் களமிறக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், புதிய ஃபோர்டு ஃபிகோ காரும் ஒரு ரவுண்டு வரும் என்பதோடு, மாருதி ஸ்விஃப்ட்டுக்கு நிச்சயம் நெருக்கடியை தரும். அத்தோடு, மாருதி ஸ்விஃப்ட் காரைவிட 20 சதவீதம் வரை குறைவான பராமரிப்பு செலவீனம் கொண்டதாகவும், 10,000 கிமீ.,க்கு ஒரு முறை சர்வீஸ் செய்தாலே போதும் என்றும் ஃபோர்டு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

04. மாருதி எஸ் க்ராஸ்

04. மாருதி எஸ் க்ராஸ்

பட்ஜெட் கார் தயாரிப்பாளர் என்ற முத்திரையால், பிரிமியம் மாடல்கள் எடுபடவில்லை என்ற கருத்து மாருதி மனதில் இருக்கிறது. இதற்காக, நெக்ஸா என்ற பிரிமியம் ஷோரூம்களை தனியாக திறந்து அதன்மூலமாக, முதல் மாடலாக எஸ் க்ராஸ் என்ற புதிய க்ராஸ்ஓவர் மாடலை அறிமுகம் செய்தது மாருதி. விலையை நிர்ணயம் செய்வதில் மாருதி கில்லாடியாக கருதப்பட்டு வந்த நிலையில், எஸ் க்ராஸ் க்ராஸ்ஓவர் மாடலை ஓவர் பிரிமியமாக நினைத்து விலையை நிர்ணயம் செய்துவிட்டது. இது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை சிறிது பொய்க்கச் செய்தது. ஆனால், அதே நேரத்தில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் மிக ஸ்டைலான ஒரு எஸ்யூவி மாடலாக க்ரெட்டாவை களமிறக்கி மாருதி எஸ் க்ராஸ் விற்பனைக்கு செக் வைத்துள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா

ஹூண்டாய் க்ரெட்டா

கடந்த மாத விற்பனை நிலவரப்படி, காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் விற்பனையில் நம்பர்1 இடத்தில் ஹூண்டாய் க்ரெட்டா ஏக் தம்மில் ஏறி அமர்ந்து விட்டது. கடந்த மாதம் 7,437 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அதேநேரத்தில், மாருதி எஸ் க்ராஸ் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. ஹூண்டாய் க்ரெட்டா விற்பனையை கண்டு அரண்டு நிற்கும் மாருதி, இப்போது க்ரெட்டா எஸ்யூவிக்கு டீலர்களில் ஒரு லட்ச ரூபாய் வரை டிஸ்கவுண்ட் கொடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், தற்காலிகமான நெருக்கடியை போக்கிக் கொள்ள மாருதி முனைந்துள்ளது.

போகப் போக தெரியும்...

போகப் போக தெரியும்...

விலை குறைவான உதிரிபாகங்கள், சிறப்பான வாடிக்கையாளர் சேவை மற்றும் விரிவான சர்வீஸ் கட்டமைப்பு போன்ற காரணங்கள் நிச்சயமாக மாருதிக்கு பெரிய பக்கபலமாக இருக்கிறது. ஆனாலும், உண்மையான போட்டி மற்றும் விற்பனை நிலவரம் வரும் மாதங்களில்தான் தெரிய வரும். ஏனெனில், முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்பட்ட கார்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே, கடந்த மாத விற்பனை பட்டியல் இருக்கிறது. எனவே, வரும் மாதங்களில் வாடிக்கையாளர்களின் கவனத்தை புதிய மாடல்கள் ஈர்த்தனவா அல்லது மாருதியை அவர்கள் எந்தளவு நேசிக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.. போட்டியை சமாளித்து மாருதி தனது விற்பனையை தக்க வைக்குமா என்பதை அடுத்த சில மாதங்களில் தெரிந்து விடும்.

Most Read Articles
English summary
Maruti Faces Real Competition Now.
Story first published: Tuesday, September 29, 2015, 11:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X