மாருதி நெக்ஸா பிரிமியம் ஷோரூம்களின் சேவை குறித்து கடும் அதிருப்தி!
நம் நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி வாடிக்கையாளர்கள் சேவையில் நம்பர்-1 என்ற பெருமையை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. பட்ஜெட் கார் தயாரிப்பாளர் என்று தன் மீது இருக்கும் முத்திரையை போக்கிக் கொள்ளும் விதத்தில், நெக்ஸா என்ற புதிய பிரிமியம் ஷோரூம்களை சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது.
சுஸுகி எஸ் க்ராஸ் மற்றும் மாருதி பலேனோ போன்ற சற்று கூடுதல் பிரிமியம் அம்சங்கள் கொண்ட கார் மாடல்களை நெக்ஸா ஷோரூம்கள் வழியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நெக்ஸா ஷோரூம்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை அளிக்கப்படும் என்றும், இந்த ஷோரூம்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர்தரமான கார் வாங்கும் அனுபவத்தை கொடுக்கும் என்று தெரிவித்தது.
இந்தநிலையில், எஸ் க்ராஸ் கார் எதிர்பார்த்த அளவு விற்பனை செல்லாத நிலையில், பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் காரால் தற்போது நெக்ஸா ஷோரூம்கள் களை கட்டியிருக்கின்றன. இந்த வேளையில், நெக்ஸா ஷோரூம்களின் சேவை மீது வாடிக்கையாளர்கள் பலர் சமூக வலைதளங்களில் புகார்களை அள்ளி வீசி வருகின்றனர். இது நெக்ஸா ஷோரூம்களின் மீதான நம்பகத்தன்மையை குறைக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
அடுத்ததாக, புகார் தெரிவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரெடிமேட் பதில் ஒன்றும் வருகிறது. அன்புடைய வாடிக்கையாளரே, உங்களது இ-மெயில் முவரியும், தொலைபேசி எண்ணையும் தாருங்கள். உங்களது பிரச்னை குறித்து விரைவில் தொடர்பு கொள்ள ஏதுவாகும்," என்ற ரெடிமேட் பதில் ஆட்டோமேட்டிக்காக வந்து விழுகிறது. இதுதான் வாடிக்கையாளர்களை மேலும் அதிருப்திக்கு ஆளாக்கியிருக்கிறது. டுவிட்டரில் நெக்ஸா ஷோரூம்கள் மீது குவிந்து வரும் புகார்களை கீழே காணலாம்.


Click it and Unblock the Notifications








