டெல்லியில் மாருதியின் முதல் 'பிரிமியம்' கார் ஷோரூம் திறப்பு!

Written By:

டெல்லியில், மாருதி கார் நிறுவனத்தின் முதல் பிரிமியம் கார் ஷோரூம் திறக்கப்பட்டிருக்கிறது. மாருதி நெக்ஸா என்ற பெயரில் திறக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஷோரூமில் மாருதி நிறுவனத்தின் உயர்வகை மாடல்கள் மட்டும் விற்பனை செய்யப்படும்.

பட்ஜெட் கார் தயாரிப்பாளர் என்ற முத்திரையை நீக்கி, பிரிமியம் மாடல்களை விரும்பும் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இந்த புதிய ஷோரூம் அமைக்கப்பட்டிருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும்.

Maruti Showroom
 

தற்போது இந்த புதிய ஷோரூம் வழியாக மாருதி சியாஸ் செடான் கார் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. மேலும், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் எஸ்- கிராஸ் கிராஸ்ஓவர் மாடல் மற்றும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மாடல்கள் இந்த நெக்ஸா ஷோரூம் வழியாகவே விற்பனை செய்யப்பட உள்ளது.

டெல்லியை தொடர்ந்து நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் இதேபோன்று பிரிமியம் கார் ஷோரூம்களை மாருதி கார் நிறுவனம் திறக்க இருக்கிறது.

English summary
Maruti Suzuki has opened its first premium dealership in India called the Nexa in New Delhi. The showroom will focus on selling the brand's premium models.
Story first published: Tuesday, May 19, 2015, 16:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark