மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவிக்கு ஒரு லட்சம் வரை தள்ளுபடி!!

Written By:

மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவிக்கு டீலர்களில் ஒரு லட்சம் வரை அதிரடி தள்ளுபடி மற்றும் சேமிப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகையை பெறுவதற்கு இன்றே கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை, டெல்லி, பெங்களூர் உள்பட நாட்டின் பல முக்கிய நகரங்களில் இயங்கி வரும் மாருதி நெக்ஸா ஷோரூம்களில் இந்த அதிரடி தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகிறது. சலுகை விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

விலை அதிகம்

விலை அதிகம்

கார் விலை நிர்ணயம் செய்வதில் மாருதி கில்லாடி. போட்டியாளர்களுக்கு சவால் தரும் வகையிலேயே மாருதி கார்கள் விலை இருக்கும். ஆனால், மாருதி எஸ் க்ராஸ் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுவிட்டதால் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை. எனவேதான், இந்த அதிரடி தள்ளுபடி மற்றும் சேமிப்பு சலுகைகள் வழங்குவதற்கு காரணமாகியுள்ளது.

1.3லி மாடலுக்கான சலுகைகள்

1.3லி மாடலுக்கான சலுகைகள்

மாருதி எஸ் க்ராஸ் 1.3லி டிடிஐஎஸ் 200 மாடலுக்கு ரூ.20,000 முதல் ஒரு லடச ரூபாய் வரை தள்ளுபடி மற்றும் சேமிப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.

1.6லி மாடலுக்கான சலுகைகள்

1.6லி மாடலுக்கான சலுகைகள்

மாருதி எஸ் க்ராஸ் க்ராஸ்ஓவரின் 1.6லி டீசல் எஞ்சின் கொண்ட மாடலின் டிடிஐஎஸ் 320 மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.70,000 வரை சேமிப்புச் சலுகைகளையும், சில டீலர்களில் டிடிஐஎஸ் 320 மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.90,000 வரை சேமிப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

மாருதி நெக்ஸா டீலர்களில் பழைய மாருதி கார்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால், ரூ.30,000 வரை லாயல்டி போனஸும் வழங்கப்படுகிறது. சில டீலர்களில் பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்து 1.6லி எஸ் க்ராஸ் காரை தேர்வு செய்தால் ரூ.40,000 வரையிலும், 1.3லி மாடலுக்கு ரூ.20,000 வரையிலும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

விரையுங்கள்...

விரையுங்கள்...

இந்த சலுகைகள் டீலருக்கு டீலர் மாறுபடும். மேலும், இந்த சலுகைகளை பெற இன்றே கடைசி நாள் என்பதால், உடனடியாக அருகிலுள்ள மாருதி நெக்ஸா ஷோரூம்களை அணுகி கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். அத்துடன் முன்பதிவு செய்து உறுதிப்படுத்துவதும் அவசியம்.

 
English summary
Maruti Offers Discounts Up to INR 1 Lakh On The S Cross.
Story first published: Wednesday, September 30, 2015, 9:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark