ஆயில் ஃபில்டர் பிரச்னை: சத்தமில்லாமல் புதிய கார்களை ஆய்வு செய்யும் மாருதி!
ஆயில் ஃபில்டரில் கசிவு பிரச்னை இருக்கிறதா என்பதை கண்டறிவதற்காக, சமீபமாக விற்பனை செய்யப்பட்ட கார்களில் ஆய்வு செய்து வருகிறது மாருதி கார் நிறுவனம்.
கடந்த இரு நாட்களாக மாருதி கஸ்டமர் கேரில் இருந்து இதுகுறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்து வருகிறது மாருதி நிறுவனம். அவ்வாறு சோதனை செய்ய வந்த சர்வீஸ் சூப்பர்வைசர் மற்றும் மெக்கானிக்கிடம் கறந்த விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

கார் மாடல்கள்
சர்வீஸ் சூப்பர்வைசர் தெரிவித்த தகவலின்படி, மாருதி டிசையர், சியாஸ், செலிரியோ உள்ளிட்ட கார்களின் பெட்ரோல் மாடல்களின் ஆயில் ஃபில்டரில் கசிவு பிரச்னை இருக்கிறதாம்.

தயாரிப்பு விபரம்
எந்த மாதங்களுக்கு இடையில் தயாரிக்கப்பட்டது என்ற விபரம் அவர்களுக்கு தெரியவில்லை. எனது கார் புதிய மாருதி டிசையர் மாடல். எனவே, சமீபத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மாருதி பெட்ரோல் கார்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

ஆயில் ஃபில்டர் சப்ளையர்
பியூரோலேட்டர் என்ற நிறுவனம் சப்ளை செய்த ஆயில் ஃபில்டர்களில்தான் கசிவு பிரச்னை கண்டறியப்பட்டுள்ளதாம். எனவே, புதிதாக உற்பத்தி செய்யப்படும் மாடல்களில் இந்த பிரச்னை இருக்காது.

இலவசமாக மாற்றித் தர உறுதி
பிரச்னை இருப்பதாக தெரியவந்தால், உடனடியாக சர்வீஸ் மையத்திற்கு எடுத்துச் சென்று இலவசமாக சம்பந்தப்பட்ட பாகத்தை மாற்றித் தரப்படும் என்று அவர்கள் கூறினர்.

அதுக்குள்ள பிரச்னை?
கார் வாங்கி முழுசா ஒரு மாசம் கூட ஆகலை. அதற்குள்ளாகவே ஒரு ஆய்வு நடவடிக்கை என்று வாடிக்கையாளர்களை புலம்ப வைக்கின்றன மாருதி உள்ளிட்ட கார் நிறுவனங்கள். மேலும், பாதிப்புக்குள்ளான மாடல்களின் தயாரிப்பு தேதி குறித்த அறிவிப்பையும் முறைப்படி மாருதி இதுவரை வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications