பெட்ரோல், டீசல் மாடல்களில் வருகிறது 7 சீட்டர் வேகன் ஆர்?

Written By:

7 பேர் பயணிக்கும் வசதியுடன் புதிய மாருதி வேகன் ஆர் மினி எம்பிவி கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இதுதொடர்பாக, பிரபல ஆட்டோமொபைல் தளம் ஒன்றில், இந்த புதிய காரை பற்றிய பல முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 7 சீட்டர் வேகன் ஆர் மினி எம்பிவி காருக்கு உதிரிபாகங்களை தயாரித்து வழங்குவதற்கும் மாருதி சப்ளையர்களுக்கு ஆர்டர் கடிதம் வழங்கியுள்ளதாகவும் அந்த இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்தியாவுக்கான குறியீட்டுப் பெயர்

இந்தியாவுக்கான குறியீட்டுப் பெயர்

2013ம் ஆண்டு இந்தோனேஷிய சர்வதேச ஆட்டோ ஷோவில் கான்செபெட் மாடலாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்த கான்செப்ட் மாடல் தற்போது இந்தியாவில், 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் மினி எம்பிவி கார் YJC என்ற குறியீட்டுப் பெயரில் உற்பத்தி நிலைக்கு தயாராகிறது.

சோதனைகள்

சோதனைகள்

உதிரிபாகங்கள் வழங்குவதற்கான ஆர்டர் சப்ளையர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டதையடுத்து, விரைவில் பரிசோதனைக்கான கார்கள் தயாரிக்கப்பட்டு, இந்திய சாலை நிலைகளில் வைத்து விரைவில் சோதனைகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

பெட்ரோல், டீசல் என இரு மாடல்களிலும் வருகிறது. பெட்ரோல் மாடலில் 1.0 லிட்டர் கே- சீரிஸ் எஞ்சின் அல்லது ஸ்விஃப்ட் காரில் இருக்கும் 1.2 லிட்டர் எஞசின் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் மாடலில் செலிரியோ காரில் பயன்படுத்தப்படும் 800சிசி எஞ்சினை பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

இடவசதி

இடவசதி

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட கார். எனவே, டட்சன் கோ ப்ளஸ் கார் போன்றே மூன்றாவது இருக்கையில் சிறியவர்கள் மட்டுமே அமர இயலும். பொதுவாக, அதிக பொருட்களை வைத்து எடுத்துச் செல்வதற்கான பயன்பாடு கொண்டதாக இருக்கும்.

டாக்சி மார்க்கெட்

டாக்சி மார்க்கெட்

தனிநபர் மார்க்கெட் மட்டுமின்றி, டாக்சி மார்க்கெட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விலை

விலை

இந்த கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டிருப்பதால், வரிச்சலுகை கிடைக்கும். எனவே, மிக சவாலான விலையிலான ஓர் மினி எம்பிவி காராக நிலைநிறுத்தப்படும் என நம்பலாம். ரூ.5 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
English summary
According to reports, Maruti will launch the new mini MPV car in India next year.
Story first published: Thursday, October 15, 2015, 9:39 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark