புதிய பிரிமியம் டீலர்களை திறக்க மாருதி கார் நிறுவனம் திட்டம்!
பிரிமியம் அந்தஸ்திலான கார் மாடல்களுக்காக தனி ஷோரூம்களை திறக்க மாருதி கார் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
பட்ஜெட் கார்களை தவிர்த்து, பிரிமியம் ரக கார் மார்க்கெட்டிலும் வலுவான வர்த்தகத்தை பெறுவதற்கு மாருதி முடிவு செய்திருக்கிறது.

இதற்காக, புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த நிலையில்,பிரிமியம் அந்தஸ்து கொண்ட கார்களை வாங்கும் வாடிக்ககையாளர்களின் எண்ண ஓட்டத்தை பூர்த்தி செய்யும் விதத்தில், பிரத்யேகமான ஷோரூம்களை மாருதி திறக்க உள்ளது.
தற்போது செயல்பட்டு வரும் மாருதி கார் ஷோரூம்களிலிருந்து இவை முற்றிலும் வேறுபட்ட அனுபவத்தை வழங்குவதாக உயர் தரத்துடன் அமைக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு நேரடி போட்டியாக வரும் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார், எஸ்எக்ஸ்4 க்ராஸ் மற்றும் கிசாஷி பிரிமியம் செடான் உள்ளிட்ட மாடல்களை இந்த புதிய பிரிமியம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக, நாட்டின் முக்கிய நகரங்களில் 35 பிரிமியம் கார் ஷோரூம்களை திறக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய ஷோரூம்கள் மூலம் தனது பிராண்டு மதிப்பு வெகுவாக உயரும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.


Click it and Unblock the Notifications








