விபத்தில் உருக்குலைந்த மாருதி எஸ் க்ராஸ்... வைரலாக பரவும் படங்கள்!!

By Saravana

விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னரே ஒரு ஹூணடாய் க்ரெட்டா எஸ்யூவி படுமோசமாக தாக்குதலுக்கு ஆளான சம்பவம் பற்றி செய்தியை சமீபத்தில் பார்த்தோம்.

இதைத்தொடர்ந்து, தற்போது விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் மாருதி எஸ் க்ராஸ் கார் ஒன்றும் பயங்கர விபத்தில் சிக்கியிருக்கிறது. இந்த விபத்தில் அந்த கார் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளது.

வைரலாகிய படங்கள்

வைரலாகிய படங்கள்

வாட்ஸ்அப் மூலமாக இந்த காரின் விபத்து படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஜாம்நகரில் இந்த விபத்து நடந்ததாகவும், மாருதி டீலரை சேர்ந்த விற்பனை பிரதிநிதி இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

காரணம்

காரணம்

விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவில்லை. அதிவேகத்தில் சென்றதாலேயே விபத்து ஏற்பட்டிக்கலாம் என்று கருதப்படுகிறது. விபத்தில் சிக்கிய மாருதி எஸ் க்ராஸ் கார் கடுமையாக சேதமடைந்துள்ளது. அதில், சென்றவர்கள் பலத்த காயமடைந்திருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்ற கூறிவிடலாம். அந்தளவுக்கு மோசமாக நசுங்கியுள்ளது.

ஃபியட் 1.6லி டீசல் எஞ்சின்

ஃபியட் 1.6லி டீசல் எஞ்சின்

மாருதி எஸ் க்ராஸ் கார் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினுடன் வருகிறது. இதில், 1.6 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட கார்தான் விபத்தில் சிக்கியிருப்பதாக தெரிகிறது. மேலும், ஃபியட்டின் 1.6 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இந்தியாவில் அறிமுகமாகும் முதல் மாடல் மாருதி எஸ் க்ராஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முற்றிலும் சேதம்...

முற்றிலும் சேதம்...

விபத்தில் சிக்கிய கார் முற்றிலும் சேதமடைந்ததாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. விபத்தில் சிக்கியிருக்கும் இந்த மாருதி எஸ் க்ராஸ் கார் காரின் கட்டமைப்பு பற்றிய பாதுகாப்பு சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

டெஸ்ட் டிரைவ் கார்

டெஸ்ட் டிரைவ் கார்

விபத்தில் சிக்கியது டீலரின் டெஸ்ட் டிரைவ் காராக கூறப்படுகிறது. மாருதி எஸ் க்ராஸ் காரை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது ஓர் அதிர்ச்சிகரமான சம்பவமாகவே இருக்கும்.

Photo Source: Facebook

Most Read Articles
English summary
Pictures of what is believed to be the first reported crash of Maruti S Cross have emerged on Facebook.
Story first published: Friday, July 31, 2015, 14:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X