மாருதி எஸ் க்ராஸ் காருக்கு ரூ.3 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி- விபரம்

By Saravana

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை தீர்த்துக்கொள்ளும் விதத்தில் மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவிக்கு அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை விலையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

டெல்லியிலுள்ள மாருதி டீலர்களில் இந்த அதிரடி தள்ளுபடி வழங்கப்படுவதாக டீம் பிஎச்பி தளத்தின் உறுப்பினர் ஒருவர் தகவல் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆண்டு கடைசி நெருங்கியுள்ளதையடுத்து, இந்த சலுகையை நாட்டின் பிற பகுதிகளில் உள்ள டீலர்களிலும் விரைவில் வழங்கப்படும் வாய்ப்புள்ளது.

இந்த அதிரடி தள்ளுபடி நேரடியாக விலையில் வழங்கப்படுவதால், நிச்சயமாக கொடுக்கும் பணத்திற்கு மதிப்புடைய டீலாகவே இதனை கருத முடியும். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

எப்போதுமே விலை நிர்ணயத்தில் கில்லியாக செயல்படும் மாருதி நிறுவனம், எஸ் க்ராஸ் காரை பிரிமியமாக நிலைநிறுத்த முயன்று, விலையை சற்று அதிகமாக நிர்ணயித்துவிட்டது. இதுவும் எஸ் க்ராஸ் விற்பனை மந்தமடைந்ததற்கு ஒரு காரணம். மேலும், நெக்ஸா டீலர்கள் மட்டுமே இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.

டிசைன்

டிசைன்

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி டிசைனில் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. அதனுடன் ஒப்பிடும்போது மாருதி எஸ் க்ராஸ் எடுப்பான தோற்றத்தை கொண்டிருக்கவில்லை. இதுவும் ஒரு முக்கிய காரணம். அதேவேளையில், பிற அம்சங்கள் அனைத்திலும் சிறப்பானதாக இருக்கும் எஸ் க்ராஸ் தற்போது விலையிலும் சகாயமாக கிடைப்பதால், டெல்லி வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறப்பான தேர்வாக அமையும்.

விலையில் நேரடி தள்ளுபடி

விலையில் நேரடி தள்ளுபடி

மாருதி எஸ் க்ராஸ் காரின் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலின் டெல்ட்டா பேஸ் வேரியண்ட்டுக்கு ரூ.2.9 லட்சம் வரையில் விலையில் தள்ளுபடி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலமாக காரின் விலையில் நேரடியாக 22 சதவீதம் குறைகிறது. ரூ.11.99 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்ட இந்த கார் தற்போது ரூ.9 லட்சத்தையொட்டி கிடைக்கிறது.

சக்திவாய்ந்த மாடல்

சக்திவாய்ந்த மாடல்

மாருதி எஸ் க்ராஸ் காரின் 1.6 லிட்டர் டீசல் மாடல் 118 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. எனவே, ரூ.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த ரகத்தில் சிறப்பான மாடலாக மாருதி எஸ் க்ராஸ் காரை கூற முடியும்.

 டீல் விபரம்

டீல் விபரம்

மாருதி எஸ் க்ராஸ் காரின் 1.6 லிட்டர் மாடலின் டெல்ட்டா வேரியண்ட்டுக்கு ரூ.2.9 லட்சம் தள்ளுபடி வழங்கப்படும் நிலையில், அதன் ஸீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய உயர்வகை வேரியண்ட்டுகளுக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி வழங்குவதாக டீலர்கள் வாடிக்கையாளர்களிடம் உத்தரவாதம் கொடுத்துள்ளனர். அதிக கிரவுன்ட் கிளியரன்ஸ், சக்திவாய்ந்த எஞ்சின் கொண்ட பெரிய அளவிலான ஹேட்ச்பேக் ரக கார் மாடலை எதிர்பார்ப்போருக்கு இது மிகச் சிறந்த சாய்ஸாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

1.3 லி மாடலுக்கும் சலுகைகள்

1.3 லி மாடலுக்கும் சலுகைகள்

மாருதி எஸ் க்ராஸ் காரின் மற்றொரு 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலுக்கு இலவச ஆக்சஸெரீகளை கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்வதற்கு டெல்லி டீலர்கள் உறுதி வழங்கி வருகின்றனர். இருப்பை குறைப்பதற்கு எந்த லெவலுக்கும் இறங்குவதற்கு டெல்லி டீலர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்ப இதையும் பார்த்துட்டு போங்க...

அப்ப இதையும் பார்த்துட்டு போங்க...

மாருதி எஸ் க்ராஸ் காரின் சிறப்பம்சங்கள்

மாருதி எஸ் க்ராஸ் Vs ஹூண்டாய் க்ரெட்டா: ஒப்பீட்டு பார்வை

More from DriveSpark

Article Published On: Friday, December 18, 2015, 10:04 [IST]
English summary
Maruti S-Cross gets over Rs. 3 lakh discount in Delhi.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+