அக்.26ல் ரிலீஸ்... மாருதியின் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் பற்றியத் தகவல்கள்!!
அடுத்த மாதம் 26ந் தேதி மாருதி நிறுவனத்தின் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, ஐரோப்பிய மார்க்கெட்டில் சுஸுகி பலேனோ பிராண்டில் செல்ல இருக்கும் அந்த புதிய கார் பிராங்க்ஃபர்ட் ஆட்டோ கண்காட்சி மூலமாக, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலின் அதிகாரப்பூர்வ படங்கள் மற்றும் சில விசேஷ தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மேட் இன் இந்தியா
இந்த புதிய கார் இந்தியாவில் உள்ள மாருதி ஆலையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆப்பிள் கார்ப்ளே
முதல்முறையாக இந்தியாவில் ஆப்பிள் கார்ப்ளே வசதியை சுஸுகி பலேனோ கார் மூலமாக மாருதி அறிமுகம் வழங்க உள்ளது. கார் இன்ஃபில்ட் சாதனத்தில், ஐ-போன் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களை இணைத்துக் கொண்டு போன் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளை பெற முடியும்.

புரொஜெக்டர் ஹெட்லைட்
புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. எல்இடி பகல்நேர விளக்குகளும் அலங்காரத்தையும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது கூடுதல் பாதுகாப்பையும் வழங்கும்.

எஞ்சின் ஆப்ஷன்
ஸ்விஃப்ட் காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களுடன் வர இருக்கிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாக வரும்.

புதிய பெட்ரோல் எஞ்சின்
இந்த கார் 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் பெட்ரோல் எஞ்சினில் ஆப்ஷனிலும் செல்கிறது. இதில், சுஸுகியின் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் கொண்டதாக இருப்பதால், அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். இந்த மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

இடவசதி
இந்த காரில் 5 பேர் தாராளமாக அமர்ந்து செல்வதற்கான இடவசதியை அளிக்கும். மேலும், இன்டிரியர் மிகவும் தரமான பாகங்களை கொண்டிருக்கும்.

உறுதியான கட்டமைப்பு
இந்த கார் முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் இலகு எடை மற்றும் அதிக உறுதித்தன்மை கொண்ட உதிரிபாகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சிறப்பான கையாளுமை, எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.

பூட்ரூம்
இந்த காரில் 335 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் வசதி இருக்கிறது. இது வெளியூர் பயணங்களின்போது பொருட்களை எடுத்துச் செல்வதற்கு வசதியாக இருக்கும்.

விற்பனை
பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோ வாயிலாக ஐரோப்பிய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டாலும், அடுத்த ஆண்டு துவக்கத்தில்தான் அங்கு விற்பனைக்கு செல்கிறது. ஆனால், இந்தியாவில் அதற்கு முன்னதாகவே விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அடுத்த மாதம் 26ந் தேதி இந்த புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை மாருதி விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

எதிர்பார்க்கும் விலை
ரூ.6.50 லட்சம் ஆரம்ப விலை முதல் ரூ.9 லட்சம் வரையிலான விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதியின் புதிய நெக்ஸா ஷோரூம்கள் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








