மாருதி பெலெனோ காரின் தயாரிப்பு நிலை மாடல் அறிமுகம்!

By Saravana

ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு போட்டியாக ஒரு புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மாடலை மாருதி நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

சுஸுகி ஐகே2 கான்செப்ட் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டிருக்கும் இந்த புதிய கார் வரும் 15ந் தேதி பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த காரின் தயாரிப்பு நிலை மாடலின் படங்கள் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது.

பிரிமியம் மாடல்

பிரிமியம் மாடல்

எஸ் க்ராஸ் காரைத் தொடர்ந்து மாருதியின் நெக்ஸா பிரிமியம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. வடிவமைப்பிலும், வசதிகளிலும் சிறப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் இருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் போன்றே, இந்த காரிலும் சுஸுகியின் புதிய 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சின் பெரிதும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, ஸ்விஃப்ட், டிசையர் கார்களில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

மாருதி பெலெனோ காரின் பேஸ் மாடல் ரூ.7 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 அறிமுகம்

அறிமுகம்

வரும் 15ந் தேதி பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் சுஸுகி பெலெனோ அறிமுகம் செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக இந்த புதிய காரை மாருதி விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி

போட்டி

ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கும், ஹோண்டா ஜாஸ் காருக்கும் நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki had recently announced that its YRA premium hatchback model will be called Baleno. They have now revealed to us the production ready model prior to its global debut.
Story first published: Tuesday, September 1, 2015, 9:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X