அறிமுகமான 2 நாட்களில் 4,500 முன்பதிவுகளை பெற்ற மாருதி பலேனோ!

By Ravichandran

மாருதி சுசுகி நிறுவனம் சார்பாக அறிமுகம் செய்யப்பட்ட பலேனோ கார், இரண்டே நாட்களில் 4,500 புக்கிங்களை பெற்றுள்ளது.

பிரிமீயம் ஹேட்ச்பேக் காரான மாருதி பலேனோ, கடந்த 26ந் தேதி அறிமுகம் செய்யபட்டது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த நிறுவனம் மூலமாக அறிமுகம் செய்யபட்டுள்ள காருக்கு நல்ல வரவேற்ப்பை அளித்துள்ளனர்.

பிரிமீயம் ஹேட்ச்பேக் ரக கார் வகையில், பலேனோ காருக்கு கடும் போடி நிலவுகிறது. கொஞ்ச காலத்திற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா ஜாஸ், ஹூண்டாய் எலைட் ஐ20 உள்ளிட்ட கார்களிடம் இருந்து பலேனோவுக்கு போட்டி உள்ளது.

Maruti Suzuki Baleno Records 4500+ Bookings Within Two Days

பலேனோ பிரிமீயம் ஹேட்ச்பேக் கார், மாருதி சுசுகியின் பிரத்யேக நெக்ஸா டீலர்ஷிப் மூலம் விற்கபடுகிறது. தற்போது வரை, இந்த நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலம் எஸ்-கிராஸ் மற்றும் பலேனோ மாடல் கார்கள் விற்கபடுகிறது. பலேனோ பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்களை பற்றி தெரிந்து கொள்ள ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்து வருவதாக, மாருதி நிறுவனம் தெரிவிக்கிறது.

மாருதி நிறுவனம், இந்த பிரிமீயம் ஹேட்ச்பேக் காரை, ஏற்றுமதி சந்தைகளையும் மனதில் வைத்து கொண்டே, இவ்வாறு வடிவமைத்து, தயாரித்துள்ளதாக தெரிவிக்கிறது. இந்த புதிய பலேனோ சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இந்த புதிய மாருதி பலேனோ ஹேட்ச்பேக் கார்கள் இந்தியாவில் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகியின் பலேனோ கார், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ்-ஸுடன் இணைக்கப்பட்டுள்ள 1,248 சிசி டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. மேலும், 5-ஸ்பீட் மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ்-ஸுடன் இணைக்கபட்டுள்ள 1,197 பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ள கார்களையும் மாருதி வெளியிடுகிறது. சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றவாறு, பூஸ்டர்ஜெட் எஞ்ஜின் கொண்டுள்ள கார்களை சுசுகி நிறுவனம் வெளியிட திட்டமிட்டுள்ளது.

விற்பனையை கூட்டும் வகையில், மாருதி சுசுகி நிறுவனம் மேலும் பல்வேறு மாடல் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.இந்திய சந்தையை பொறுத்த வரை, அடுத்தபடியாக காம்பேக்ட் எஸ்யூவி மாடல் காரை வெளியிட மாருதி முடிவு செய்துள்ளது. தங்கள் நிறுவனம் சார்பாக தயாரிக்கப்படும் கார்களை, விரைவில் புது டெல்லியில் நிகழவிருக்கும் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்த மாருதி நிறுவனம் உத்தேசித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 29, 2015, 12:36 [IST]
English summary
Maruti Suzuki Baleno Records 4500+ Bookings Within first Two Days of its Launch. Maruti Suzuki Baleno was launched on in India on October 26, 2015. Customers have showed great response for this new hatchback from their trusted Car manufacturer.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+