விற்பனையில் ஒரு லட்சத்தை தாண்டியது மாருதி செலிரியோ!

By Saravana

விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஒன்றரை ஆண்டுகளில் ஒரு லட்சம் என்ற புதிய விற்பனை மைல்கல்லை மாருதி செலிரியோ கார் எட்டியிருக்கிறது.

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில்தான் இந்த புதிய ஹேட்ச்பேக் மாடலை மாருதி அறிமுகம் செய்தது. மேலும், முதல்முதலாக ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்ஷிப்ட் என்ற புதிய வகை கியர்பாக்ஸ் கொண்டதாகவும் வந்தது.

Maruti Celerio

ஆரம்பம் முதலே சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது செலிரியோ. குறிப்பாக, ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலுக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு இருக்கிறது. மேலும், பெட்ரோல், சிஎன்ஜியில் இயங்கும் மாடல்களை தவிர்த்து, சமீபத்தில் டீசலில் இயங்கும் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.

இதனால், ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் சிறப்பான தேர்வுக்கான மாடலாக மாருதி செலிரியோ விளங்குகிறது. விற்பனையில் சொதப்பி வந்த ஏ- ஸ்டார் மற்றும் ஸென் எஸ்டீலோ கார்களுக்கு மாற்றாக இந்த புதிய கார் நிலைநிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 11, 2015, 10:55 [IST]
English summary
Maruti Suzuki had launched its all-new global small car the Celerio at 2014 Auto Expo. Since then it has been introduced in several markets and is breaking record worldwide. Now the Celerio has set another record by achieving 1,00,000 sales milestone. Major credit for explosive sales of Celerio go to its Auto Gear Shift technology and multiple fuel options.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+