அடுத்த மாதம் வருகிறது மாருதி செலிரியோ டீசல்...!!

By Saravana

அடுத்த மாதம் மாருதி செலிரியோ காரின் டீசல் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதிக மைலேஜ் தரும் டீசல் மாடலாக வரும், இந்த மாடலுக்காக பலர் காத்துக்கிடக்கின்றனர்.

இந்த நிலையில், ஒருவழியாக அடுத்த மாதம் வாடிக்கையாளர்களின் கையில் இந்த கார் கிடைத்துவிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்லைடரில் செலிரியோ டீசல் மாடல் பற்றிய கூடுதல் தகவல்களை காணலாம்.

உற்பத்தி துவக்கம்

உற்பத்தி துவக்கம்

அடுத்த மாதம் செலிரியோ டீசல் வருவதை உறுதிப்படுத்தும் வகையில், இந்த காரின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ள செய்தி கிட்டியிருக்கிறது. மானேசர் ஆலையில் சமீபத்தில் செலிரியோ டீசல் மாடல் உற்பத்தி துவங்கப்பட்டுவிட்டது.

 புதிய எஞ்சின்

புதிய எஞ்சின்

செலிரியோ டீசல் மாடலில் புதிதாக தயாரிக்கப்பட்டிருக்கும் 800சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் 58 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மைலேஜ்

மைலேஜ்

லிட்டருக்கு 30.1 கிமீ மைலேஜை மாருதி செலிரியோ வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் லிட்டருக்கு 25 கிமீ வரை மைலேஜ் தரலாம் என்பதால், வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 ஏஎம்டி உண்டா?

ஏஎம்டி உண்டா?

தற்போது விற்பனையில் உள்ள செலிரியோ பெட்ரோல் மாடல் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், செலிரியோ டீசலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் இருக்காது என்று தெரிகிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

பெட்ரோல் மாடலைவிட ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை கூடுதல் விலையில் புதிய செலிரியோ டீசல் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 விற்பனை பங்களிப்பு

விற்பனை பங்களிப்பு

பட்ஜெட் விலையிலான டீசல் மாடலாக வருவதால், இந்த கார் விற்பனையில் நல்ல பங்களிப்பை மாருதி நிறுவனத்துக்கு பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, April 27, 2015, 9:26 [IST]
English summary
Maruti Suzuki Celerio Diesel Probably Launch on May.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+