வெள்ள நிவாரணத்திற்கு மாருதி நிறுவனம் ரூ.2 கோடி நிதி உதவி

By Ravichandran

தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த மக்களுக்காக மாருதி சுஸுகி நிறுவனம், 2 கோடி ரூபாய் அளிக்க முன் வந்துள்ளது.

சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால், ஏராளமான மக்கள் பாதிக்கபட்டிருந்தனர். மிகுந்த எண்ணிக்கைகளில் வாகனங்களும் பாதிக்கபட்டிருந்தது.

வெள்ளத்தால் பாதிக்கபட்ட வாகனங்களின் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு, ஏராளமான நிறுவனங்கள் விதவிதமாக உதவி வருகின்றன.

தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த மக்களுக்காக, 2 கோடி ரூபாயை பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதோடு மட்டுமல்லாமல், பல்வேறு வகைகளில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையிலான நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டு வருகின்றது.

பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியானது, வெள்ளம் பாதிக்கபட்ட பகுதிகளின் மறு சீரமைப்புக்கு உதவிகரமாக இருக்கும். தமிழ்நாட்டின் வெள்ளம் பாதிக்கபட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மாருதி சுஸுகியின் நிதியின் மூலம், வெள்ளம் பாதித்த மக்களுக்கான மக்களுக்கான நிவாரண பொருட்களும் வழங்கபட உள்ளது.

maruti-suzuki-donates-rs-2-crore-for-chennai-and-Tamilnadu-flood-victims

இந்த வெள்ளங்களில், சுமார் 6,500-க்கும் மேற்பட்ட மாருதி சுஸுகியின் வாகனங்கள் பாதிக்கபட்டிருந்தது. இதில் சுமார் 1,000 வாகனங்களின் அனைத்து பிரச்னைகளும் சரி பார்க்கபட்டு, வழக்கமான பிரயோகத்திற்கு மீண்டும் வழங்கபட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணி புரிந்து வரும் டெக்னீஷியன்கள் இந்த அசாதாரன நிலைமையை சமாளிக்க சென்னைக்கு அனுப்ப பட்டுள்ளனர்.

மாருதி நிறுவனத்தின் வாகனங்களுக்கு சர்வீஸ் செய்வதற்கு, சென்னையில் தற்போது சுமார் 500 டெக்னீஷியன்கள் உள்ளனர். இங்கு பணி புரியும் டெக்னீஷியன்கள், இடம் மாற்றபட்ட டெக்னீஷியன்களும் சேர்ந்து, பாதிக்கபட்ட வாகனங்களுக்கான சர்வீஸ்களை மேற்கொள்கின்றனர்.

ஒர்க்‌ஷாப்களிலும், சர்வீஸ் செண்டர்களில் மேற்கொள்ளபடும் பணிகளுக்கு வலு சேர்க்கும் விதமாக, 31 மொபைல் வேன்களும் உபயோகிக்கபடுகிறது.

இதையும் தாண்டி மாருதி சுஸுகி நிறுவனம், வேறு சில வழிகளில் உதவி புரிகின்றனர். தேய்மான செலவில், மாருதி நிறுவனம் 50 % ஏற்று கொள்கிறது.

மேலும், க்ளீனிங் மற்றும் பாலிஷிங் சர்வீஸ் சார்ஜ்களில் 50 % தள்ளுபடியையும் மாருதி நிறுவனம் வழங்குகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 29, 2015, 10:40 [IST]
English summary
Maruti Suzuki firm has informed that, it would be donating Rs. 2 crore for affected flood victims and other parts of Tamil Nadu. This contribution is sent to the Prime Minister's National Relief Fund. Apart from this, various customer care initiatives are also undertaken for vehicle owners.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+