மாருதி எர்டிகாவின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்: 13 கூடுதல் சிறப்பம்சங்கள் விபரம்!

Posted By:

மாருதி எர்டிகா காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கூடுதல் வசதிகள் மற்றும் ஆக்சஸெரீகளுடன் எர்டிகாவின் பெட்ரோல், மற்றும் டீசல் மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

எர்டிகா பேசியோ என்ற பெயரில் இந்த புதிய மாடலை நீங்கள் கேட்டு வாங்க முடியும். இந்த லிமிடேட் எடிசன் எர்டிகா காரில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் முழுமையாக காணலாம்.

வேரியண்ட் விபரம்

வேரியண்ட் விபரம்

மாருதி எர்டிகாவின் விஎக்ஸ்ஐ மற்றும் விடிஐ ஆகிய மிட் வேரியண்ட்டுகள் கூடுதல் வசதிகளுடன் இந்த லிமிடேட் எடிசன் மாடலாக வந்துள்ளது.

கூலர்/வார்மர் பாக்ஸ்

கூலர்/வார்மர் பாக்ஸ்

குளிர்பானங்கள், உணவுப்பொருட்களை ப்ரெஷ்ஷாக ருசிப்பதற்காக, குளிர்ச்சிப்படுத்தவும், வெப்பப்படுத்தவும் கூடிய கூலர்/வார்மர் பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஸ்பெஷல் சீட் கவர்

ஸ்பெஷல் சீட் கவர்

ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் கொண்ட பிரிமியம் இருக்கை கவர்கள் மற்றும் தலையணைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

டயர் இன்ஃப்ளேட்டர்

டயர் இன்ஃப்ளேட்டர்

டிஜிட்டல் டயர் இன்ஃப்ளேட்டர் சாதனமும் இந்த புதிய மாடலுடன் கிடைக்கும்.

ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்

ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்

ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், டிஜிட்டல் திரை மற்றும் ஒலி எச்சரிக்கை கருவி கிட்டும் இந்த எர்டிகாவில் நிரந்தர ஆக்சஸெரீயாக இடம்பெற்றிருக்கிறது.

ரியர் ஸ்பாய்லர்

ரியர் ஸ்பாய்லர்

பின்புற கூரையில் ரியர் ஸ்பாய்லர் பொருத்தப்பட்டிருக்கிறது.

புளூடூத் கிட்

புளூடூத் கிட்

ஸ்பெஷல் எடிசன் எர்டிகா காரில் மொபைல்போன்களுக்கான ஹேண்ட்ஸ் ஃப்ரீ வசதியை வழங்கும் புளூடூத் கிட் இருக்கிறது.

கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்

கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்

வெளிப்புறத்தின் அழகை கூட்டும் விதத்தில் பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டுள்ளது. இது எர்டிகாவின் லிமிடேட் எடிசன் என்பதை எடுத்தியம்பும்.

பாதுகாப்பு பெட்டி

பாதுகாப்பு பெட்டி

பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கான சிறிய பெட்டி ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டீயரிங் வீல் கவர்

ஸ்டீயரிங் வீல் கவர்

எர்டிகா லிமிடேட் எடிசனில் ஸ்டீயரிங் வீல் கவரும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

டோர் சில் கார்டு

டோர் சில் கார்டு

ஏறி, இறங்கும்போது காலணிகளால் ஏற்படும் சிராய்ப்புகளை தவிர்க்கும் விதத்தில் எர்டிகா பெயர் கொண்ட டோர் சில் கார்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இரு வண்ணங்கள்

இரு வண்ணங்கள்

இரு வண்ணங்களில் கிடைக்கும். சில்க்கி சில்வர் வண்ணத்தை ஸ்லைடில் காணலாம்.

மற்றொரு வண்ணம்

மற்றொரு வண்ணம்

சுப்பீரியர் ஒயிட் என்ற வெள்ளை வண்ணத்தை படத்தில் காணலாம்.

கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள மாருதி டீலர்களை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

 
English summary
Maruti Suzuki has launched a limited edition 'Ertiga Paseo Explore Edition' car in Indian market. The Maruti Suzuki Ertiga Paseo Explore Edition will be available in two colors - the Superior White and the Silky Silver.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark