மாருதி கார்களின் விலை உயர்ந்தது... எஸ் க்ராஸ் மட்டும் தப்பியது!
அனைத்து மாருதி கார்களின் விலை ரூ.9,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 11ந் தேதி முதல் இந்த புதிய விலை உயர்வு அமலுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாகவே, கார்களின் விலையை உயர்த்தியிருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது. மாருதி ஆல்ட்டோ 800 முதல் சியாஸ் வரையிலான கார்களின் விலை ரூ.3,000 முதல் ரூ.9,000 வரை உயர்ந்திருக்கிறது.

சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி எஸ் க்ராஸ் காரின் விலை மட்டும் உயர்த்தப்படவில்லை.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் சமீபத்தில் கார்களின் விலையை ரூ.30,000 வரை அதிகரித்த நிலையில், இந்த சமயத்தில் அனைத்து நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்த்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








