மாருதி கார்களின் விலை, ஜனவரி முதல் உயர்த்தபடுகிறது

Written By:

மாருதி சுஸுகி நிறுவனம், தங்களின் சில மாடல் கார்களின் விலையை வரும் 1 ஜனவரி 2015-ஆம் தேதி முதல் உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக, தொடர்ந்து வெவ்வேறு கார் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளின் விலை ஏற்றம் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

மாருதி நிறுவனம் அறிவித்துள்ள விலையேற்றம் செய்தி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

விலை உயர்வு அமலாகும் தேதி;

விலை உயர்வு அமலாகும் தேதி;

மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது அறிவிக்கபட்டுள்ள இந்த விலை உயர்வு, வரும் ஜனவரி 1, 2016-ஆம் தேதி முதல் அமலாக உள்ளது.

தெரிவிக்கப்டும் காரணம்;

தெரிவிக்கப்டும் காரணம்;

தற்போது அறிவிக்கபட்டுள்ள விலையேற்றதிற்கு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி, அந்நிய செலாவணி, மற்றும் உள்ளீடுகளின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகள், முக்கிய காரணங்களாக அறிவிக்கபட்டுள்ளது.

எவ்வளவு விலை உயர்வு?

எவ்வளவு விலை உயர்வு?

மாருதி சுஸுகி நிறுவனத்தினுடைய சில குறிப்பிட்ட மாடல்கள் மீது, ரூபாய் 20,000 வரை விலை உயர்த்தபடலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

எந்த மாடல்களின் விலையில் ஏற்றம்?

எந்த மாடல்களின் விலையில் ஏற்றம்?

விலை ஏற்றம் செய்யபட உள்ளதாக மட்டுமே செய்தி வெளியாகியுள்ளதே தவிர. எந்த மாடல்கள் மீது எவ்வளவு விலை ஏற்றம் செய்யபட உள்ளது என்பது குறித்த தெளிவான தகவல்கள் இது வரை வெளியிடபடவில்லை.

சொகுசு கார்களின் விலைகளும் ஏற்றம்;

சொகுசு கார்களின் விலைகளும் ஏற்றம்;

சில தினங்களுக்கு முன்னர் தான், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபுள்யூ நிறுவனங்கள் தங்கள் கார்களின் விலைகளை, வரும் 1 ஜனவரி 2016 முதல் உயர்த்த உள்ளதாக அறிவித்தனர்.

இத்தகைய விலை ஏற்றங்களால், சொகுசு கார்களின் விற்பனை பாதிக்கபடுமா, எந்த அளவு பாதிக்கபடலாம் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பிற நிறவனங்களின் அறிவிப்புகள்;

பிற நிறவனங்களின் அறிவிப்புகள்;

சில தினங்களுக்கு முன்பு, ஹூண்டாய் கார் நிறுவனமும் தங்கள் தயாரிப்புகளின் விலைகளை , 30,000 ஆயிரம் வரை உயர்தத உள்ளதாக அறிவித்துள்ளது.

ஹூண்டாய் கார் நிறுவனத்தின் விலை அதிகரிப்பும், இதே 1 ஜனவரி 2016-ஆம் தேதி முதல் அமலாக உள்ளது.

மாருதியின் புதிய அறிமுகங்கள்;

மாருதியின் புதிய அறிமுகங்கள்;

மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில், இந்திய வாகன சந்தைகளில் 2 பிரிமியம் கார்களை அறிமுகம் செய்தனர். அதாவது, இந்த 2 பிரிமியம் கார்களின் உலகளாவிய அறிமுகம் இந்தியாவில் நடத்தபட்டது.

இதே காலகட்டத்தில் தான், நெக்ஸா பிரிமியம் கார் அவுட்லெட்கள் (விற்பனை டீலர்ஷிப்கள்) இந்தியா முழுவதும் அறிமுகம் செய்யபட்டது.

இந்த நெக்ஸா பிரிமியம் கார் ஷோரூம்களில், எஸ்-கிராஸ் பிரிமியம் கிராஸ்ஓவர், பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் மாடல் கார்கள் விற்பனைக்கு கிடைக்கின்றது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்கள் விலை உயர்கிறது

பிஎம்டபுள்யூவின் அனைத்து கார்களின் மீதும், 3% விலை ஏற்றம் - விரிவான தகவல்கள்

ஹூண்டாய் கார்களின் விலை ரூ.30,000 வரை உயர்த்தப்படுகிறது

செய்திகள் உடனுக்குடன்…

செய்திகள் உடனுக்குடன்…

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

English summary
Maruti Suzuki has decided to hike the Prices of certain models from January 1, 2016. The price hike may be in the range of around or upto 20,000 rupees. Many reasons like the weak Rupee, foreign exchange and rise in input cost are quoted as the main reasons for this recent price hike.
Story first published: Friday, December 11, 2015, 16:57 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark